80, 90-களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து தான் வருகின்றனர். அப்படி வெற்றி கண்ட நடிகைகள் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்து உள்ளனர். அந்த வரிசையில் உள்ள 5 டாப் ஹீரோயின்களை பார்க்கலாம்.
அம்பிகா: 80-களில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் அம்பிகா. பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடங்களிலும், அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார் அம்பிகா. ரஜினி, கமலுக்கு கதாநாயகனாக நடித்த அம்பிகா, அவன் இவன் படத்தில் விஷாலுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
சரண்யா பொன்வண்ணன்: மணிரத்னத்தின் நாயகன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சரண்யா பொன்வண்ணன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சரண்யா தற்போது பல படங்களில் ரசிகர்களின் மனதில் நிற்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பரத், ஜீவா, விஜய் சேதுபதி, விமல், லாரன்ஸ், தனுஷ், உதயநிதி என பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தற்போது அம்மா கதாபாத்திரம் என்றாலே இயக்குனர்கள் முதலில் சரண்யா பொன்வண்ணன் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ராதிகா சரத்குமார்: கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராதிகா. தன்னுடைய துள்ளலான மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் அவருக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்பு, சின்னத்திரை தொடர்களை தயாரித்து, அவரே நடித்து வந்தார். தற்போது விஜய், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு, விஷால், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரம்யா கிருஷ்ணன்: 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தவர் தான் ரம்யா கிருஷ்ணன். அவருடைய வசீகரமான பார்வை மற்றும் சிரிப்பினால் பல ரசிகர் பட்டாளம் அவருக்கு உண்டு. அதிகமான பக்தி படங்களில் அம்மன் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். நட்சத்திர நடிகையாக இருந்தவர் சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்தார். சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்றார். பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக பாராட்டையும், வரவேற்பையும் ரம்யா கிருஷ்ணன் பெற்றார். தற்போது திரைப்படத்தில் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்து நடித்து வருகிறார்.
நதியா: 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நதியா. இவருக்கு ஆண்கள் மட்டுமின்றி பெண் ரசிகர்களும் அதிகம். சினிமாவில் பல படங்கள் நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார். தாமிரபரணி படத்தில் பிரபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.