திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரு பட வாய்ப்புக்காக ஏங்கி கொண்டிருக்கும் பரத்.. கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாத பரிதாப நிலைமை

நடிகர் பரத் தன்னுடைய ஆரம்ப கால சினிமாவை ஒரு வெற்றி ஹீரோவாகத் தான் தொடங்கினார். பாய்ஸ் திரைப்படத்தில் நான்கைந்து ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருந்தாலும், அதன் பின்னர் இவர் கோலிவுட் சினிமாவின் வெற்றி நாயகனாக காதல், எம் மகன் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷுக்கு இணையாக இவர் வளர்ந்து கொண்டு இருந்தார் என்று தான் சொல்லலாம்.

நடிகர் பரத் நன்றாக நடிப்பது மட்டுமல்லாமல் நடனத்திலும் வெளுத்துக்கட்டும் ஒரு ஹீரோ . சாக்லேட் பாய் தோற்றம் கொண்ட இவர் திடீரென்று ஆக்சன் ஹீரோவாக மாறுகிறேன் என்ற பெயரில் தொடர்ந்து ஒரு சில கதை தேர்வில் சொதப்பியதால் ரொம்ப குறுகிய காலத்திலேயே சட்டென காணாமல் போய்விட்டார். பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு வெற்றிப் படம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார் பரத்.

Also Read: ஷங்கரால் ஏற்பட்ட பிளாக் மார்க்.. இப்போது வரை கெட்ட பேருடன் முத்திரை குத்தப்பட்ட நடிகை

ஏதோ நானும் சினிமாவில் இருக்கிறேன் என்ற பெயரில் வரும் வாய்ப்புகளை எல்லாம் நடித்து தள்ளி வருகிறார் பரத். இதனால் இவர் சினிமாவில் இருப்பது போல் தோன்றினாலும் ரசிகர்களால் மறக்கப்பட்ட ஒரு நல்ல ஹீரோ தான் இவர். இவருடைய விடாமுயற்சிக்கு கிடைத்த பலன் போல் வெற்றி இயக்குனர் வசந்த பாலனின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் பரத்.

வசந்த பாலன் ஏற்கனவே பரத்தை வைத்து வெயில் என்ற ஹிட் படத்தை கொடுத்தவர் தான். தன்னுடைய எதார்த்தமான கதைக்களத்தை வைத்து புதுமுக நடிகர்களை கொண்டு அங்காடி தெரு என்னும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர். மேலும் அரவான் என்ற வித்தியாசமான திரைக்கதையை ஹிட் படம் ஆக்கியவர். இனி வசந்தபாலன் மூலம் மீண்டும் சினிமாவில் விட்டதை பிடித்து விடலாம் என்று இருந்தார் நடிகர் பரத்.

Also Read: தனுஷின் சூப்பர்ஹிட் படத்தை மிஸ் பண்ண பாய்ஸ் பட நடிகர் .. இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்

ஆனால் பரத்தின் ஆசையில் மண் விழுவது போல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. வசந்தபாலன் இயக்கத்தில் பரத் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பித்த பிறகு தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது நடிகர் பரத்துக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

பொதுவாகவே இயக்குனர் வசந்த பாலனின் படங்கள் என்றாலே அந்த படத்திற்கு கண்டிப்பாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுவிடும். அப்படித்தான் இவர் இயக்கிய அநீதி திரைப்படமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அப்போது இயக்குனர் சங்கர் தான் உதவினார். எப்படியாவது ஜெயித்து விடலாம் என்று நினைத்திருந்த நடிகர் பரத்தின் கனவு தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

Also Read: பரத் கேரியரை தூக்கி விட்ட 5 படங்கள்…. பைத்தியக்கார முருகனாக மாறிய கதாபாத்திரம்

Trending News