திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

அடேய் கோபி, சதிலீலாவதி பாக்குற மாதிரி இருக்கு.. கொஞ்சமாவது சொந்தமா யோசிங்கடா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை கழட்டிவிட்டது மட்டுமில்லாமல் தற்போது பாக்யாவின் மகள் இனியா செய்த தவறுக்கு துணை போனதால் அவளுடைய மனதையும் கலைத்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

மகளைப் பிரிந்த வேதனைகள் பாக்யா கதறி அழுகிறார். ஆனால் கோபி வீட்டிற்கு சென்ற இனியா அங்கும் சந்தோசமாக இருக்கவில்லை. முதலில் குடும்பத்தினர் அடித்து விட்டனர் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு கிளம்பினாலும் மீண்டும் வீட்டிற்கு செல்ல நினைக்கிறார்.

Also Read: இனிமேதான் சம்பவம் இருக்கு.. தாத்தாவின் ஆட்டத்தால் அலறி அடித்துக்கொண்டு ஓடப் போகும் ராதிகா

ஆனால் வீட்டிற்கு சென்றால் உன்னை மறுபடியும் அடிப்பார்கள் என்று இனியாவிற்கு தவறான ஆலோசனை கொடுத்து தன்னுடன் வைத்துக்கொள்ள பார்க்கிறார் சதிகார கோபி. எனவே மகனுடைய எண்ணத்தை புரிந்து கொண்டு கோபியின் அப்பா இனியா உடன் தங்குவதற்காக ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு சென்ற தாத்தா ராதிகாவை வேலை சொல்லியே வறுத்தெடுக்க போகிறார். இதனால் ராதிகாவும் பாக்கியலட்சுமி குடும்பத்தினர் ஆன தாத்தா, இனியா ஆகியோரை வெறுத்து ஒதுக்கி தன்னுடைய சுய ரூபத்தை காட்டப் போகிறார்.

Also Read: இனியாவை பாக்கியாவிடம் இருந்து பிரித்த கோபி.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

இதன் பிறகு தான் பாக்கியலட்சுமி சீரியல் சூடுபிடிக்கப் போகிறது. இப்படி குடும்பத்தையே பகடைக்காயாய் உருட்டும் கோபி செய்யும் ஒவ்வொரு செயலும் பாக்யாவை தான் வேதனைப்படுத்துகிறது. இதைப் பார்த்து கோபியும் குளிர் காய்கிறார்.

அதிலும் இப்போது மகளைத் தன்னுடன் வைப்பதற்காக கோபி செய்யும் சதி வேலைகளை பார்த்தால் சதிலீலாவதி பார்க்கின்ற மாதிரியே இருக்குது, கொஞ்சமாவது சொந்தமா யோசிங்கடா என்றும் நெட்டிசன்கள் பாக்கியலட்சுமி சீரியலை கிண்டல் செய்கின்றனர்.

Also Read: கோபியின் மகனுக்காக அடுத்து நடக்கும் சக்களத்தி சண்டை.. மானங்கெட்ட சீரியலா இருக்குதே!

Trending News