ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தனுஷ் படத்தால் அதர்வாவுக்கு வந்த தலைவலி.. தலைவிரித்து ஆடும் தர்மசங்கடம்

நடிகர் அதர்வாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சினிமா பின்புலத்தோடு வாரிசு நடிகர் என்ற அடையாளம் இருந்தும் அவரால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற முடியவில்லை.

இதனால் அவர் எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் அவர் கடும் உழைப்பை கொட்டி சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு துன்பங்கள் தான் தொடர்ந்து வருகிறது.

சமீப காலமாக அதர்வாவுக்கு சினிமா துறையில் நிறைய கெட்ட பெயர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. சர்ச்சைகள் பலவற்றிலும் இவர் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார். இந்நிலையில் இவர் இப்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் நிறங்கள் மூன்று.

இதில் அதர்வாவுடன் இணைந்து சரத்குமார், ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் கருணா தயாரித்துள்ளார். தமிழ் இன்டஸ்ட்ரியில் நல்ல பெயருள்ள ஒரு தயாரிப்பாளர். இருந்தாலும் இந்த திரைப்படத்தை வியாபாரம் செய்வதில் அவருக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது.

ஏனென்றால் சமீபத்தில் கார்த்திக் நரேன் தனுஷை வைத்து மாறன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். ஓடிடியில் வெளியான அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்து இயக்குனருக்கும், தனுசுக்கும் பெரும் அடியை வாங்கிக் கொடுத்தது

இதனால் மீண்டும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வியாபாரம் ஆவதில் பெரும் சங்கடத்தை சந்தித்து வருகிறது. இதில் அதர்வாவின் மார்க்கெட்டும் பெரிய அளவில் இல்லை. அதனால் தனுஷின் மாறன் திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய தலைவலியை உண்டாக்கி இருக்கிறது. அதிலிருந்து மீண்டு அவர் எப்படியும் ஒரு வெற்றியை கொடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இந்த படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார்.

Trending News