சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

மீண்டும் ஈரம் பட கூட்டணியில் மிரள விட்ட சப்தம் டீசர்.. சிம்ரன், லட்சுமி மேனன் மார்க்கெட்டை தூக்கும் ஆதி

Sabdham Teaser: சம்மர் வந்து விட்டாலே அடுத்தடுத்த படங்கள் வெளிவர ஆரம்பித்து விடும். அதிலும் திகில் மற்றும் ஹாரர் படங்கள் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

அதன்படி ஆடியன்ஸை கொலை நடுங்க வைக்கும் வகையில் வெளியாகி இருக்கிறது சப்தம் பட டீசர். அறிவழகன் இயக்கத்தில் ஆதி, சிம்ரன், லைலா, லட்சுமிமேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

ஈரம் படத்தின் மூலம் மிரட்டிய இயக்குனர் சப்தம் மூலம் ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு படு மிரட்டலாக இந்த டீசர் இருக்கிறது.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் டீசர்

எந்த வசனமும் இல்லாமல் பின்னணி இசையிலேயே மிரட்டி இருக்கின்றனர். அமானுஷ்ய சம்பவங்களை கண்டறிய வரும் ஆதி சந்திக்கும் திகில் அனுபவம் தான் இப்படத்தின் கதை என்பது டீசரை பார்க்கும் போதே தெரிகிறது.

மேலும் ஹாலிவுட் பேய் படங்களில் இருக்கும் படியான காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம் காது ஜவ்வு கிழியும் அளவுக்கு சத்தத்தை வைத்தே மிரட்டி விட்டார் இயக்குனர்.

இப்படி ஆடியன்ஸை சீட்டின் நுனிக்கு வர வைக்கும் அளவுக்கு டீசர் உள்ளது. சம்மரை முன்னிட்டு வெளிவர இருக்கும் இப்படம் நிச்சயம் வேற லெவல் வெற்றி பெறும் என ரசிகர்கள் இப்போதே வாழ்த்துக்களை கூற ஆரம்பித்து விட்டனர்.

Trending News