ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

மினி குணசேகரனாக எதிர்நீச்சல் 2வில் என்ட்ரி கொடுக்கும் ஆதி.. நான்கு பெண்களுக்கும் ஜீவானந்தம் வைக்கும் ட்விஸ்ட்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், இரண்டாம் பாகம் தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் முதல் பாகத்தில் எப்படி குணசேகரின் நடிப்பு பிரமாதமாக இருந்து மக்களை கவர்ந்தது. அதே மாதிரி இப்பொழுது புதிதாக ஜனனி கதாபாத்திரத்தில் வந்திருக்கும் பார்வதியின் நடிப்பு மக்களை வெகு விரைவாகவே கவர்ந்து விட்டது.

அதற்கு ஏற்ற மாதிரி நான்கு பெண்களும் அவர்களுக்கு பிடித்தமான தொழிலை செய்து வெற்றியை நோக்கி பயணித்து வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்று குணசேகரன் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் குணசேகரனால் ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கேற்ப நான்கு பெண்களும் சேர்ந்து குணசேகரன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ளே அனுப்பிவிட்டார்கள். இதனால் ஆக்ரோஷமான குணசேகரன் உள்ளே இருந்து கொண்டே வெளியே இருக்கும் பெண்களுக்கு குடைச்சல் கொடுக்க அஸ்திவாரத்தை போட்டு விட்டார்.

அதற்கு ஏற்ற மாதிரி இனி எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் மினி குணசேகரன் ஆக புது வில்லன் என்டரி கொடுக்கப் போகிறார். அவர் வேறு யாருமில்லை ஏற்கனவே நமக்கு பரிச்சயமான ஒரு வில்லன் தான்.

அதாவது திருச்செல்வம் இயக்கி தேவயானி, அபி என்ற கேரக்டரில் நடித்த கோலங்கள் சீரியலில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அஜய் கபூர் தான். இனி இவர்தான் மினி குணசேகரன் ஆக வெளியில் இருந்து ஆட்டம் போட்டு நான்கு பெண்களின் இலட்சியத்திற்கு இடையூறாக இருக்கப் போகிறார். அந்த வகையில் எதிர்நீச்சல் கதை இனி பரபரப்பாக இருக்கப் போகிறது.

Trending News