செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிவாஜி வீட்டு மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன்.. கோலாகலமாக நடந்த திருமணம், வைரல் புகைப்படங்கள்

Adhik Ravichandran Marriage Photos: மார்க் ஆண்டனி படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்த ஆதிக் ரவிச்சந்திரன் இன்று பிரபுவின் மகளை கரம் பிடித்திருக்கிறார். இவர்களுடைய திருமணம் இன்று காலை சென்னையில் பயங்கர கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே பிரபுவின் மகளுக்கு திருமணமாகி அது விவாகரத்தில் முடிந்தது. அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா, ஆதிக் இருவரும் காதலித்த நிலையில் பெரியோர்களின் சம்மதத்துடன் தற்போது இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இந்த திருமணத்திற்கு முதல் ஆளாக ஓடி வந்த விஷால் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அந்த போட்டோ தான் இப்போது இணையதளங்களை கலக்கி கொண்டிருக்கிறது. வேஷ்டி, சட்டையில் அட்டகாசமாக வந்த அவர் மணமக்களை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

Also read: அஜித்தின் ட்ரெண்ட்டை மாற்றப் போகும் பிரபுவின் மருமகன்.. கேட்கவே காமெடியாக இருக்கு

மேலும் இந்த விழாவிற்கு அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகள் அனோஷ்கா, தங்கை ஷாமிலியுடன் வருகை தந்திருக்கிறார். தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைய இருக்கிறார்.

திருமணத்திற்கு முதல் ஆளாக ஓடி வந்த விஷால்

adhik-ravichandran
adhik-ravichandran

அதன் காரணமாகவே அஜித்தின் குடும்பம் இந்த திருமண விழாவிற்கு வருகை தந்து புதுமண தம்பதிகளை வாழ்த்தி இருக்கின்றனர். அந்த வகையில் சிவாஜி வீட்டு மருமகனாகி இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவாஜி வீட்டு திருமணம்

prabhu daughter wedding
prabhu daughter wedding

Also read: ஆதிக் மடியில் விழுந்த ஏகே 63 பட வாய்ப்பு.. அஜித் நண்பர் கொடுத்த சர்டிபிகேட்

Trending News