ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அண்ணன் திருந்தினாலும் இந்த கதிர் மட்டும் திறந்த வாய்ப்பே இல்ல.. குணசேகரனுக்கு குடைச்சல் கொடுக்கும் சக்தி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் கதாபாத்திரத்தில் புதிதாக வந்த வேலராமமூர்த்தி நடிப்பு என்னதான் நன்றாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி எதார்த்தமாக இல்லாமல் போய்விட்டது. அதனாலயே டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவு அடைந்து விட்டது. இதையெல்லாம் சரி செய்யும் விதமாக தற்போது சக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை முன்னிறுத்தி காட்டுவது பார்ப்பதற்கே சுவாரசியமாக இருக்கிறது.

அத்துடன் இனி மேலும் குணசேகரன் வீட்டில் இருந்து கொண்டு அண்ணன் சொந்த பந்தம் என்று இருந்தால் நம் வாழ்க்கை வீணாகிவிடும் என்று முடிவு பண்ணி அருணை தேடி போய்விட்டார். போன இடத்தில் சாறு பாலா குணசேகருக்கு எதிராக ஒரு துருப்புச் சீட்டு கிடைத்துவிட்டது என்று நினைத்து ஆதிரையை வைத்தே குணசேகரனுக்கு ஆப்பு வைக்க தயாராகி விட்டார்.

இதனைத் தொடர்ந்து ஞானம் மற்றும் கதிர் வீட்டுக்கு வந்த பிறகு ஆதிரை போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்திருக்கிறார் என்று உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஜனனி அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று சொன்னதும் கதிர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கண்ணா பின்னா என்று வார்த்தையால் தாக்குகிறார்.

Also read: குணசேகரனை டம்மியாக்கிய எதிர்நீச்சல் சீரியல்.. இப்போ டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டும் அப்பத்தா

கதிர் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருந்த பொழுது பாசத்தை டஜன் கணக்கில் கொட்டி தீர்த்தார். அத்துடன் நந்தினியையும் புரிந்துகொண்டு இனிமேல் திருந்திடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், நான் எந்த காரணத்தை கொண்டும் திருந்தவே மாட்டேன் இப்படித்தான் இருப்பேன் என்பதற்கு ஏற்ப முரடனாகவே இருக்கிறார். ஒருவேளை குணசேகரன் திருந்தினால் கூட இவர் திருந்த மாட்டார் போல அப்படி மூர்க்கத்தனமாக இருக்கிறார்.

பிறகு ஜனனி அம்மாவை வெளியே போக சொல்லும் பொழுது சக்தி பிடிவாதமாக மறுப்பு தெரிவித்தார். அத்துடன் அப்பத்தாவின் விஷயத்தையும் கிளற ஆரம்பித்து அனைவரது வாயையும் அடைத்து விட்டார். இதற்கு அடுத்தபடியாக சாருபாலா மற்றும் ஆதிரை, குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்கள். வந்ததும் அருணை ஆக்சிடென்ட் பண்ணது அப்பத்தா இறப்பிற்கு யார் காரணம் என்ற விசாரணையும் முன் வைக்கிறார்கள்.

ஆனால் இப்படி நம் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும் குணசேகரன் முன் ஜாமின் வாங்குவதற்கு ஏற்பாடு பண்ணி விட்டார். அந்த வகையில் போலீசார் வழக்கம் போல் விசாரணை நடத்திவிட்டு போய்விடுவார். இதற்குப் பிறகு குணசேகரன் இந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்து எலெக்ஷனில் ஜெயிப்பாரா தோற்பாரா என்பது தான் மீதம் உள்ள கதையாக இருக்கும்.

Also read: தெருத்தெருவாக போய் ஓட்டு கேட்கும் எதிர்நீச்சல் டீம்.. நாடாளுமன்றத் தேர்தலை மிஞ்சும் பரிதாபம்

Trending News