புதன்கிழமை, ஜனவரி 15, 2025

போர் அடிக்கும் ஆதிரை கல்யாணம்.. டம்மியாகும் குணசேகரன், ஜனனி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் முக்கியமான நபராக எதிர்பார்த்த ஜீவானந்தம் வந்த பிறகாவது விறுவிறுப்பாக போகும் என்று பார்ப்பவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். ஆனால் இதோ கிணற்றில் போட்ட கல் போல் சுறுசுறுப்புடன் இல்லாமல் டல் அடித்து வருகிறது. இதனால் இந்த நாடகத்தை விரும்பி பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதாவது ஒவ்வொரு எபிசோடு ட்விஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று நினைத்து குழப்பத்தில் தான் கதை அமைந்து வருகிறது. நல்லா போய்க்கிட்டு இருந்த சீரியலுக்கு கண்திருஷ்டியாக அமைந்துவிட்டது. ஆதிரை திருமணம் மற்றும் அப்பத்தாவின் 40% சொத்து இது இரண்டையும் மட்டுமே வைத்து ரொம்ப மாதமாகவே கதையை ஓட்டி வருகிறார்கள்.

Also read: நிச்சயதார்த்தத்தை பற்றி கவலைப்படும் கோபி.. பேசியே உஷார் பண்ணின பழனிச்சாமி

ஐயோ போதுமடா சாமி என்று சொல்லும் அளவிற்கு எரிச்சலாக கதை இருக்கிறது. ஆனாலும் சிலரால் இந்த நாடகத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதற்கு காரணம் இதில் நடிக்கக்கூடிய கேரக்டர்கள் தான் என்று சொல்லலாம். மேலும் ஜனனி மற்றும் மற்ற பெண்கள் அனைவரும் சேர்ந்து ஆதிரை கரிகாலன் திருமணத்திற்கு எதிராக மிகப்பெரிய மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார்கள் என்று குணசேகரன் கண்டுபிடித்து விட்டார்.

இதுதான் நடக்கப் போகிறது இப்படி தான் செய்கிறார்கள் என்று இவர் மூளைக்கு எட்டினபடி ஜனனி செய்த எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறார். ஆனாலும் அதற்கு எதிராக எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமல் எந்த நம்பிக்கையுடன் மௌனம் காத்து வருகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: முல்லைக்கு குழந்தையை தாரவாத்து கொடுக்கும் தனம்.. கண்கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சி

இதற்கிடையில் ஜீவானந்தம் மேஜிக் செய்பவர் போல் ஒரு போன் கால் மூலமாக எல்லாத்தையும் காலி பண்ணி குணசேகரன் வீட்டிற்குள் ஈசியாக நுழைந்து அப்பத்தாவிடம் கைரேகை வாங்கி 40% சொத்து இனி நமக்கு தான் என்று எந்த நம்பிக்கையில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதுவரை ரியலாக கொண்டு போன கதை தற்போது ஏதோ லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது.

எது எப்படியோ கூடிய சீக்கிரத்தில் ஆதிரை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மக்கள் எதிர்பார்க்கக் கூடிய குணசேகரன் வீட்டில் அடிமையாக இருக்கும் பெண்கள் சுதந்திரமாக இருப்பதை கொண்டு வந்தால் இந்த நாடகம் இன்னும் வெற்றிகரமாக போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

Also read: பாக்கியா, பழனிச்சாமி நிச்சயதார்த்தமா? என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான் என தடுக்க நினைக்கும் கோபி

Trending News