புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தூங்கு மூஞ்சி அருணை நினைத்து புது மாப்பிள்ளையே வெறுக்கும் ஆதிரை.. எக்ஸ் காதலியே பார்க்க மறுத்த ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் ஃபேவரிட் ஆக இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக எல்லோரும் மனதிலும் இடம் பிடித்த கரிகாலன், இதுவரை அனைவரும் இவரை பைத்தியக்காரன், முட்டாள் என்று ஏளனமாக நடத்தி வந்தார்கள்.

அப்படிப்பட்ட இவர் நேற்று எல்லார் மனதையும் வாட்டும் படி, கண்களில் இருந்து கண்ணீர் வரும் அளவிற்கு பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. ஆளானப்பட்ட ஜான்சி ராணியே கண் கலங்கிவிட்டார். இவருடைய பேச்சுக்கும் வார்த்தைக்கும் குணசேகரனின் அம்மாவின் மனதும் மாறிவிட்டது.

Also read: மறுஜென்மம் பெற்ற தனம்.. இறுதி அத்தியாயத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ்

அந்த அளவிற்கு இவருடைய பேச்சு பல எதார்த்தங்களை கொண்டு வந்தது. ஆனால் இந்த ஆதிரை மட்டும் இன்னும் அந்த தூங்குமூஞ்சி அருணை நினைத்து கரிகாலனை வெறுத்து வருகிறார். ஆனால் கரிகாலன், ஆதிரையிடம் ஒரு வாரம் எனக்கு டைம் கொடு அதுக்குள் நான் உன் மனதை மாற்றி விடுவேன் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

கண்டிப்பாக ஆதிரை மனம் மாறும் கரிகாலன் ஆசைப்பட்ட மாதிரி இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதற்கு தான் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் என்ன அந்த ஜான்சி ராணி வீட்டிலேயே போய் அவர்களுடன் ஒன்றாக இருக்க முடியுமா என்பது தான் கேள்வி குறியாக இருக்கிறது. அடுத்தபடியாக ஈஸ்வரி, ஜீவானந்தத்தை பார்க்க வேண்டும் என்று கௌதமிடம் கேட்டிருந்தார்.

Also read: ஆதிரை தலையில் இடியை இறக்கிய கரிகாலன்.. ஈஸ்வரிக்காக எதையும் செய்யத் துணிந்த ஜீவானந்தம்

இதனைத் தொடர்ந்து கௌதம், ஈஸ்வரிக்கு போன் பண்ணி ஜீவானந்தம் உங்களை பார்க்க மறுத்துவிட்டார். ஆனால் அதற்கு பதிலாக போன் கொடுக்கிறேன் நீங்கள் பேசுகிறீர்களா என்று கேட்கிறார். பிறகு ஜீவானந்தம் ஈஸ்வரி பேச ஆரம்பித்தபோது, ஜீவானந்தத்தின் முகத்தில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி நான் குணசேகரனின் மனைவி என்று பேச்சை நடத்தி பல விஷயங்களை பற்றி கேட்கிறார்.

அதற்கு ஜீவானந்தம் சில விஷயங்கள் நாட்கள் போக போக தான் புரியும். இப்பொழுது உங்களுக்கு நான் தப்பாக தெரிகிற மாதிரி கூடிய சீக்கிரம் என்னை புரிந்து கொள்ள நேரம் வரும் என்று கூறுகிறார். அத்துடன் நீங்கள் குணசேகரன் மனைவி என்பதால் நான் பேசவில்லை, ஈஸ்வரி எனக்கு பிடித்தமான பெயர் அதை மறக்க முடியாமல் நான் பேசுகிறேன் என்று ஒரு ட்விஸ்ட்டை வைக்கிறார். இதைக் கேட்டதும் ஈஸ்வரி குழப்பத்தில் யோசிக்க ஆரம்பிக்கிறார்.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

Trending News