Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை நாளாக யார் குணசேகரன் கேரக்டருக்கு வரப்போகிறார் என்று ஆவலுடன் அனைவரும் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தோம். தற்போது அந்த தருணம் நெருங்கி விட்டது. அதாவது குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான ஆளு மாஸ் என்ட்ரி கொடுத்து வருகிறார்.
ஆனால் இதற்கிடையில் நடிகர் மாரிமுத்துவை தவிர குணசேகரன் கேரக்டரை வேறு யாராலயும் நடிக்க முடியாது என்று மக்கள் அவர்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வந்தார்கள். அந்த வகையில் அவரே மாதிரி குணம், தோரணை, பேச்சு என அனைத்தையும் காட்டி வெள்ளித்திரையில் மிரட்டிக் கொண்டு வரும் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டே வந்தது.
ஆனால் அவர் படங்களில் ரொம்பவே பிஸியாக இருந்ததால் இதற்கு முழு சமத்தையும் கொடுக்காமல் இருந்து வந்தார். அதே நேரத்தில் அவருடைய வட்டாரங்களில் உள்ள அனைவரும் இந்த கேரக்டரில் நீ போய் நடித்தால் உன்னுடைய பேரும் புகழும் இன்னும் டபுள் மடங்காக அதிகரிக்கும் என்று அவரிடம் கூறியிருக்கிறார்கள்.
சன் டிவி நிறுவனமும் இந்த கேரக்டரில் நடிக்க வந்தால் அதிகமான சம்பளத்தை கொடுக்கிறேன் என்று அவரிடம் எப்படியோ பேசி கூட்டி வந்து விட்டார்கள். அந்த வகையில் வேலராமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் அவர்களுடைய கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வந்தார்கள்.
இயக்குனருக்கும் இந்த கதாபாத்திரம் தான் எதிர்நீச்சல் நாடகத்தின் முக்கிய ஆணிவேர் என்பதால் அதற்கான கேரக்டரில் நடிப்பவர் ரொம்பவே கெத்தாகவும், எந்த இடத்திலும் சொதப்பி விடக்கூடாது என கவனமாக இருந்தார். அதனால் அனைவருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் தற்போது வேலராமமூர்த்தி, ஆதி குணசேகரன் கேரக்டருக்கு டபுள் மடங்கு பவர்ஃபுல்லாக மாஸ் என்டரி கொடுக்க வருகிறார்.
அதுவும் சும்மா வரல தாரை தப்பட்டையுடன் மேல தாளத்துடன் சும்மா பாட்டு அதிரும்படி வருகிறார். இவர் வந்த பிறகு தான் அந்த வீட்டில் உள்ள மருமகள்களின் ஆட்டமும் வேற லெவல்ல மாறப்போகிறது. அவர்களை அடக்கி ஆணாதிக்கம் செய்யும் வகையில் வேலராமமூர்த்தி நடிப்பு எந்த அளவுக்கு மக்களை கவர போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Also read: இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்