வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஹாட்ரிக் தோல்வி அதல பாதாளத்திற்கு வந்த ஆதிபுருஷ் வசூல்.. முதலுக்கே மோசம் போச்சே என தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

Adipurush Box Office Report: பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டார் வலம் வந்து கொண்டிருந்தார் நடிகர் பிரபாஸ். மேலும் பாகுபலி 2 படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. அதன் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தை பெரிதும் நம்பி இருந்தார்.

ஓம் ராவத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருந்தார். இந்த படத்தின் டிரைலர் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் டிக்கெட் முன்பதிவின் போது அவசர அவசரமாக டிக்கெட் விற்கப்பட்டது.

Also Read : சல்லி சல்லியாக நொறுங்கிய ஆதிபுருஷ்.. இது என்ன பாகுபலி நாயகனுக்கு வந்த சோதனை

ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சற்று மந்தமாகத்தான் தான் சென்றது. கடந்த வெள்ளிக்கிழமை படம் வெளியான பிறகு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. ஆனால் வசூலில் நல்ல லாபம் கிடைத்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் கூறிவந்தது.

அதன்படி நான்கு நாட்களிலேயே கிட்டத்தட்ட 400 கோடியை நெருங்கியதாக அறிவித்தனர். ஆனால் கடந்த திங்கட்கிழமை வெறும் 16 கோடி மட்டுமே வசூல் செய்து ஆதிபுருஷ் அதல பாதாளத்திற்கு சென்றது. அதுவும் நேற்று செவ்வாய்க்கிழமை வெறும் 10.8 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

Also Read : மூன்றே நாளில் பொன்னியின் செல்வன் வசூலை நெருங்கிய ஆதிபுருஷ்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய படக்குழு

600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் படத்தின் வசூல் கடந்த சில நாட்களாக பல மடங்கு குறைந்து இருக்கிறது. மேலும் வரும் நாட்களில் ஒற்றை இலக்குகளில் வசூல் செய்யும் என பலரும் கூறி வருகிறார்கள். இதனால் ஆதிபுருஷ் 500 கோடியை நெருங்குமா என்பதை சந்தேகமாக இருக்கிறது. ஆகையால் தயாரிப்பாளர் மிகுந்த கலக்கத்தில் உள்ளார்.

மேலும் பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாகோ மற்றும் ராதே ஷ்யாம் படங்கள் தோல்வியை தழுவியது. இப்போது ஆதிபுருஷ் படத்தின் மூலம் ஹட்ரிக் தோல்வி அடைந்துள்ளார் பிரபாஸ். இவ்வாறு தொடர் தோல்வியால் அவரது சினிமா மார்க்கெட் சரியா அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read : ராமாயண காவியத்தின் புனிதத்தை கெடுத்த ஆதிபுருஷ்.. படத்தை தடை செய்ய வலுக்கும் கோரிக்கை

Trending News