வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மூன்றே நாளில் பொன்னியின் செல்வன் வசூலை நெருங்கிய ஆதிபுருஷ்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய படக்குழு

Movie Adipurush Boxoffice Report: பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆரம்பம் முதலே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. மேலும் பிரபாஸ் இந்த படத்தை பெரிதும் நம்பியிருந்தார்.

அதுமட்டுமின்றி 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கோடிகளை வாரி குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில் முதல் நாளில் 60 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து ஆதிபுருஷ் படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருந்தது.

Also Read : ராமர் மார்க்கெட்டையே காலி செய்த பிரபாஸ்.. ஒட்டுமொத்தமாக கதறவிட்ட ஆதிபுருஷ்

ஆனால் படக்குழு தரப்பில் இருந்து ஆதிபுருஷ் படத்தின் வசூல் விபரத்தை வெளியிட்டுள்ளனர். அதாவது இப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 200 கோடியை தாண்டி வசூல் செய்ததாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி நேற்று மூன்றாவது நாள் முடிவில் 300 கோடியை தொட்டு விட்டதாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

ஆரம்பத்தில் பொன்னியின் செல்வன் படம் சோழர்களின் கதை என்பதால் தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகளில் வசூல் செய்யவில்லை. இதனாலேயே ஆதிபுருஷ் படத்திற்கான டிக்கெட்டுகள் தமிழகத்தில் பெரும்பாலும் விற்கவில்லை. ஆனாலும் 300 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Also Read : மொத்தமாய் தலையில் துண்டை போட்ட பிரபாஸ், திடீர் விசிட் அடித்த அனுமன்.. ஆதிபுருஷ் அட்ராசிட்டிஸ்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இதில் இரண்டாம் பாகம் 350 கோடி வசூல் செய்திருந்தது. ஆகையால் நாளை அல்லது அதற்கு மறுநாளில் பொன்னியின் செல்வன் வசூலை ஆதிபுருஷ் முறியடித்து விடும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையான வசூல் விவரம் வெளியானால் மட்டுமே இதன் உண்மை நிலவரம் தெரியவரும். மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில் முதல் நாளே தியேட்டரில் பாதி சீட்டுகள் காலியாக இருந்த நிலையில் படத்திற்கு கிடைக்கும் மோசமான விமர்சனம் காரணமாக வெறிச்சோடி தான் காணப்படுகிறது.

Also Read : சல்லி சல்லியாக நொறுங்கிய ஆதிபுருஷ்.. இது என்ன பாகுபலி நாயகனுக்கு வந்த சோதனை

Trending News