வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆதிபுருஷ் விமர்சனம் கிளப்பிய பீதி.. 600 கோடியும் முதலை வாயில் போட்ட கதையா?

Adipurush: ஓம்ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ஆதிபுருஷ் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து மோசமான விமர்சனங்களை பெற்றதால், அதே படத்தை நல்ல முறையில் கிராபிக்ஸ் செய்ய வேண்டும் என்று மேலும் 100 கோடி செலவு செய்தனர்.

முதலில் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் மறுபடியும் 100 கோடி செலவில் கிராபிக்ஸ் என மொத்தமாக 600 கோடியும் முதலை வாயில் போட்ட கதையாக மாறிப்போச்சு. அது மட்டுமில்ல ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை பார்த்தும் பல பேர் விமர்சன ரீதியாக பேசியதால் படக்குழுவுக்கு மனரீதியாக அழுத்தம் ஏற்பட்டது.

Also Read: சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா.? முதல்ல அனுமார், இப்ப ராமர்.. ஆதிபுருஷ் தல தப்புமா!

இப்போது இந்த படத்தை முதல் முறை பார்த்த சென்சார் குழுவின் தலைவரும்,  திரைப்பட விமர்சகர் உமைர் சந்து பரபரப்பான ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். இதில் நடித்த நடிகர் நடிகைகளின் நடிப்பு மோசமாக இருக்கிறது. பிரபாஸ் நடிப்பை பள்ளியில் சென்று பயின்று வர வேண்டும், அந்த நிலையில் அவர் நடித்திருக்கிறார்.

கண்டிப்பாக இது கார்ட்டூன் படம் தான் மற்றும் ஆதிபுருஷ் ஒரு டார்ச்சர் என தனது ட்விட்டர் பேஜில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தை பற்றி பலரும் பல விதமான கருத்துக்கள் கூறி வந்தனர். தற்போது முதல் விமர்சனம் இப்படி வந்துள்ளது. இதையெல்லாம் பார்த்த படக்குழுவுக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளது.

Also Read: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார் போல.. கோவிலுக்குள் முத்தம், ஆதிபுருஷால் வெடிக்கும் சர்ச்சை

பிரபாஸ் கண்டிப்பாக வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் இருப்பதால் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. சமீப காலமாகவே புராணங்களில் இருந்து ஆன்மீக கதைகளை படமாக்கப்பட்டு வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அதை சுதப்பி விடுகின்றனர். அதனால்தான் அந்த படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காமல் போகிறது.

அந்த வகையில் அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பயங்கர அடி வாங்கியது. அதே நிலைமை ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஆதிபுருஷ்-க்கும் வந்து விடுமோ என்ற பயம் இப்போதே ஏற்பட்டுள்ளது.

Also Read: இப்படி எல்லாம் விளம்பரப்படுத்தினா படம் ஓடுமா.? தியேட்டரில் சீட்டு ஒதுக்கிய ஆதிபுருஷ் பிரபாஸ்

ஏற்கனவே சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் ஆதிபுருஷ் படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இப்போது பிரபாஸ் இருக்கிறார். ஆனால் இந்த படத்தைப் பார்த்த உமைர் சந்து மிக மோசமான விமர்சனத்தை கொடுத்ததால் படக்குழு தற்போது அவர் மீது பயங்கர கடுப்பில் உள்ளனர். 

Trending News