வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ராமாயண காவியத்தின் புனிதத்தை கெடுத்த ஆதிபுருஷ்.. படத்தை தடை செய்ய வலுக்கும் கோரிக்கை

Adipurush: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிக்கான், கீர்த்தி சனோன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பாக வெளிவந்த படம் தான் ஆதிபுருஷ். அதிக பொருட்செலவில் ஏகப்பட்ட பிரமோஷன் செய்யப்பட்ட அப்படம் முதல் நாளிலேயே பலத்த அடி வாங்கியது. அதைத்தொடர்ந்து பல தியேட்டர்கள் ஆளில்லாமல் காற்று வாங்கியது.

இப்படி முழுக்க முழுக்க எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே பெற்று வரும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று பல எதிர்ப்பு குரல்கள் கிளம்பியுள்ளது. அதாவது இப்படம் ராமாயண காவியத்தை மையப்படுத்தி 3டி தொழில்நுட்பம் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே ஒரு சிறு எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.

Also read: மூன்றே நாளில் பொன்னியின் செல்வன் வசூலை நெருங்கிய ஆதிபுருஷ்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய படக்குழு

ஆனால் படத்தை பார்க்க பலரும் ராமாயண காவியத்தின் புனிதமே கெட்டு விட்டதாக கூறி வருகின்றனர். மேலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு காட்டப்பட்டு இருக்கும் பல காட்சிகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் ராவணனின் ஹேர் ஸ்டைல் 2k கிட்ஸ் போல் இருப்பது கேலி, கிண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருந்தாலும் படத்தில் ராமர் மற்றும் அனுமரின் சுபாவமே வேறு மாதிரி காட்டப்பட்டிருக்கிறதாகவும் ஒரு குற்றச்சாட்டை எழுந்துள்ளது. அதாவது பிரபாஸை பார்க்கும் போது ராமராக தெரியவில்லை. பாகுபலி நாயகனாக தான் தெரிகிறார். அந்த அளவுக்கு அவர் ஒரு ஆக்ரோஷமாக காணப்படுகிறார்.

Also read: புஸ்ஸுன்னு போன பிரபாஸின் எதிர்பார்ப்பு.. போட்ட காசை கூட எடுக்க முடியாமல் திணறும் ஆதிபுருஷின் 3வது நாள் கலெக்சன்

அது மட்டுமின்றி சீதையைக் காண செல்லும் அனுமார் அவருக்கு தன் இரு கைகளை கூப்பி வணக்கத்தை பணிவுடன் தெரிவிப்பது போல் புராண நாடகங்களில் இருக்கும். ஆனால் இப்படத்தில் அவர் ஒரு கையை தன் நெஞ்சின் மீது வைப்பது போன்று காட்டப்பட்டிருக்கிறது. இதுவும் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் சில காட்சிகள் ரொம்பவும் முரண்பாடாக இருப்பதும் ரசிகர்களின் கொந்தளிப்புக்கு காரணமாக இருக்கிறது.

அந்த வகையில் ராமாயணம் என்பது எங்களுடைய அடையாளம். அதன் பெருமையை குறைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என இப்படத்திற்கு எதிரான கண்டன குரல்கள் ஓங்கி ஒலித்து வருகிறது. இவ்வாறு படத்தை தடை செய்ய வலுக்கும் எதிர்ப்புகளால் பட குழுவினர் கொஞ்சம் அரண்டு போய் தான் இருக்கின்றனர்.

Also read: சல்லி சல்லியாக நொறுங்கிய ஆதிபுருஷ்.. இது என்ன பாகுபலி நாயகனுக்கு வந்த சோதனை

Trending News