Marumagal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மருமகள் சீரியல், யதார்த்தத்தையும் மீறி ஆதிரையின் செயல்கள் அனைத்தும் ஆச்சரியப்பட வைக்கிறது. அதாவது தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நம்மை சுற்றி இருக்கிறவர்கள் எந்த கஷ்டமும் படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தன்னிடம் இருக்கும் பணத்தை வாரி கொடுத்து உதவி செய்து வருகிறார்.
ஆனால் இங்கே ஒரு பக்கம் உதவி செய்த பின் வீட்டிற்கு போன பிறகு சித்திக் கொடுமையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். ஆனாலும் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பணத்தையும் நகையையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவி பண்ணி சித்தியிடம் தண்டனையும் பெற்றுக் கொள்கிறார். இப்படி தாராள பிரபுவாக இருக்கும் ஆதிரைக்கும், கஞ்சத்தனம் மட்டுமே எனக்கு தெரியும் என்று இருக்கும் பிரபுவுக்கும் கல்யாணம் பண்ணுவது தான் ஒரே தீர்வாக இருக்கிறது.
புத்திசாலித்தனமாக இருக்கும் ஆதிரை
அந்த வகையில் ஏற்கனவே இவர்கள் இருவரும் சந்தித்த நிலையில் பிரபுவின் பணம் ஆதிரை இடம் மாட்டிக் கொண்டு அதைக் கேட்டு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து ஆதிரையை உண்டு இல்லை என்று ஆக்கிட்டார். பிறகு உன் டார்ச்சர் தாங்க முடியவில்லை என்று ஆதிரை பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். இந்நிலையில் பிரபு, குடும்பத்திற்காக நான் ஏன் கஷ்டப்பட வேண்டும். தனியாக போனால் நன்றாக இருக்கும் என்று ஒரு நினைப்பு வந்து விட்டது.
அதற்கு அஸ்திவாரமாக கல்யாணம் பண்ணிவிட்டால் தனி குடித்தனம் போவது ஈசியாகிவிடும் என்று பிளான் பண்ணி பிரபு, அப்பாவிடம் பொண்ணு பார்க்க சொல்லி கேட்டார். இதனைத் தொடர்ந்து பிரபுவுக்கு பொண்ணு பார்க்கும் விஷயம் நடக்கப் போகிறது. ஆனால் பிரபு பொண்ணு பார்க்கப் போகிறது யார் என்றால் ஆதிரையின் தோழி.
அந்த வகையில் ஆதிரையின் தோழி என்னை பொண்ணு பார்ப்பதற்கு மாப்பிள்ளை வீட்டார்கள் வருகிறார்கள். அதனால் நீ கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆதிரைக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறார். பிறகு ஆதிரையின், சித்தியை எப்படியோ சமாளித்து தோழி வீட்டுக்கு போய் விடுகிறார். ஆனால் பிரபு ஒரு மகாகஞ்சன் என்று தோழிக்கு பிரபுவின் சித்தப்பா குடும்பத்தின் மூலம் தெரிய வருகிறது.
இதனால் இந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று பிரபுவை ஆதிரையின் தோழி நிராகரிக்கிறார். ஆனால் இதற்கு காரணம் ஆதிரை தான் என்று பிரபு, அதிரை மீது கோபப்படுகிறார். இதனால் டாம் அண்ட் ஜெரியாக சண்டை போட போகும் ஆதிரை மற்றும் பிரபு எப்படி திருமணத்தில் ஒன்று சேர்கிறார்கள் என்பதை நோக்கி கதை நகரப் போகிறது.
அந்த வகையில் சித்திக் கொடுமையிடம் மாட்டிக் கொண்ட ஆதிரை, பிரபுவை கல்யாணம் பண்ணி கஞ்சத்தனத்தில் சிக்கி தவிக்க போகிறார். இருந்தாலும் ஆதிரை மருமகளாக போன பிறகுதான் பிரபுவின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு விடிவுகாலமாக நிம்மதி கிடைக்கப் போகிறது. இதற்கிடையில் பிரபுவின் சித்தப்பா மற்றும் அத்தை செய்யும் சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டு முழிக்க போகும் பிரபுவை ஆதிரை புத்திசாலித்தனமாக காப்பாற்ற போகிறார்.
சன் டிவியில் டாப்பில் ஜொலிக்கும் சீரியல்கள்
- Kayal: பெரியப்பாவோட கூட்டு சேர வில்லி அத்தை வந்தாச்சு
- 400 எபிசோடு முடிந்த நிலையில் சன் டிவி சீரியல் நடிகை மாற்றம்
- Singapenne: நந்தா தான் அழகனா? அழுது புலம்பும் ஆனந்தி