வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தலைகீழாக தீப்பந்தத்தை சுற்றும் அதிதி பாலன்..

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. இதில் நாயகியாக நடித்திருந்தவர் அதிதி பாலன். இப்படத்திற்கு முன்னதாகவே இவர் அஜித் நடிப்பில் 2015ல் வெளியான என்னை அறிந்தால் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

இருப்பினும் அருவி படத்தில் தனது அற்புதமான நடிப்பால் அதிதி பாலன் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். தமிழ் படம் தவிர்த்து இவர் மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

இப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகை என பல்வேறு பிரிவுகளில் Ananda Vikatan Cinema Awards, Edison Awards, Filmfare Awards South, Norway Tamil Film Festival Awards, மற்றும் விஜய் அவார்ட் உட்பட பல விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அதிதி இதன் பின் குட்டி ஸ்டோரி என்ற தமிழ் படத்திலும், கோல்டு கேஸ் என்ற மலையாள படத்திலும் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான நவரசா படத்திலும் அதிதி பாலன் நடித்திருந்தார்.

தற்போது அதிதி பாலன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெருப்பு வளையத்தை கை மற்றும் இடுப்பில் வைத்து சுற்றும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அதிதி பாலனின் திறமையை பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் தற்சமயம் படவெட்டு என்ற மலையாளப்படத்திலும், சாகுந்தலம் எனும் தெலுங்குப்படத்திலும் நடித்து வருகிறார்.

Trending News