வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அதிதியை வளர விடாமல் செய்யும் சதி.. வெட்ட வெளிச்சமான உண்மை

தற்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் அதிதி என்ற வார்த்தை தான் மந்திரம் போல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் அதிதி சங்கர் படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

அந்த வகையில் சோசியல் மீடியா முழுவதும் இவரை பற்றி தான் பேசப்பட்டு வருகிறது. மேலும் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, பட ப்ரோமோஷன் என்று அவர் பயங்கர பிசியாக இருக்கிறார். இப்படி பரபரப்பு கிளப்பினாலும் அவரைப் பற்றி சில தேவையில்லாத விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அதாவது விருமன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மதுரை வீரன் என்ற பாடலை அதிதி பாடி இருக்கிறார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அந்தப் பாடலை முதலில் ராஜலட்சுமி தான் பாடினார் என்றும், யுவன் சங்கர் ராஜா அவரை அவமதித்து விட்டு அதிதியை பாட வைத்து விட்டார் என்றும் ஒரு செய்தி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

மேலும் ராஜலட்சுமியும் இது பற்றி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அந்த பாடலை முதன்முதலாக அதிதி தான் பாடினார் என்ற புது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது யுவன் சங்கர் ராஜா அந்த பாடலை பாடுவதற்கு முதலில் அதிதியை தான் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதன் பிறகு ராஜலட்சுமியின் குரலையும் பதிவு செய்து இருக்கிறார். இருவரில் யாருடைய குரல் நன்றாக இருக்கிறது என்பதை பார்த்து அதில் அதிதியின் குரலை அவர் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் இந்த விஷயம் தெரியாமல் ராஜலட்சுமியை அவமதித்து விட்டதாக பல்வேறு செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது.

தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிதி இந்த உண்மையை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பல நாள் வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. மேலும் என்னை வளர விடாமல் செய்வதற்கு பல சதி நடக்கிறது என்று அதிதி தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆதங்கப்பட்டு வருகிறாராம்.

Trending News