வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அதிதியின் அபார திறமையை கண்டு மிரண்ட விருமன் படக்குழு.. சும்மா பட்டைய கிளப்பிட்டாராம்….!

கோலிவுட்டில் ஏற்கனவே இருக்கும் வாரிசு நடிகர்கள் வரிசையில் கடந்த ஆண்டு இணைந்தவர் தான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர். இவர் தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

அதிதி சங்கர் அடிப்படையில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற மாணவி. எனவே இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் மருத்துவ பட்டம் பெற்றவருக்கும் நடிப்புக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? இவர் எப்படி நடிக்க போகிறார்? தந்தையின் பெயரை வைத்து எல்லோரும் ஈஸியாக சினிமாவில் நுழைந்து விடுகிறார்கள் என்றெல்லாம் பலர் விமர்சனம் செய்தனர்.

தந்தை நடிகர் அல்லது இயக்குனர் என்பதால் அவர்களின் மகனுக்கோ அல்லது மகளுக்கோ சினிமாவில் அவ்வளவு எளிதாக அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை. பல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களே சினிமாவில் ஜொலிக்க முடியாமல் காணாமல் போய் விட்டார்கள்.

அதற்கு காரணம் சினிமாவில் புகழ் மட்டும் போதாது திறமை வேண்டும். அந்த வகையில் அதிதியிடம் என்ன திறமை உள்ளது என பலர் அவரை கேலி செய்தனர். ஆனால் அதிதி தனது தந்தை இயக்குனர் என்பதால் நான் நடிக்க வரவில்லை. எனக்கு திறமை இருப்பதால் தான் நடிக்க வந்தேன் என விருமன் படப்பிடிப்பில் நிரூபித்துள்ளார்.

அதன்படி விருமன் படப்பிடிப்பில் தொர்ந்து இரண்டு மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி படக்குமுவினர் அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டாராம் அதிதி. அதுமட்டுமல்ல பத்து சாய்பல்லவி சேர்ந்தால் தான் நடனத்தில் அதிதியை ஈடுசெய்ய முடியும் என அவரின் நடனத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு நடனத்தில் பின்னுகிறாராம் அதிதி.

பயங்கர பில்டப்பா இருக்கே படம் வரட்டும் இவங்க சொன்னதெல்லாம் உண்மையா இல்லையானு தெரிஞ்சிடும். அதுவரைக்கும் பொறுமையா இருப்போம்.

Trending News