செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரபல நடிகரின் தீவிர ரசிகரான சங்கர் மகள்.. அதிதி சங்கரை கொண்டாடும் ரசிகர்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர். இவர் எம்பிபிஎஸ் படித்த முடித்தவுடன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார்.

இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் அதிதி ஷங்கர் பாவாடை தாவணியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். விருமன் படத்தில் மதுரை பெண்ணாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அண்மையில் இவர் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என சமூக வலைதளங்களில் இணைந்தார்.
விருமன் படத்தில் அதிதி அறிமுகமான தகவலையடுத்து அதிதியை ட்விட்டரிலும், இன்ஸ்டகிராமிலும் பல ரசிகர்கள் பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள்.

aditi shankar vijay
aditi shankar vijay

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதிதி சங்கர் போட்டோசூட் புகைப்படங்களை எடுத்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது அதிதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யின் புகைப்படத்தை லைக் செய்துள்ளார். அதிதி தந்தை ஷங்கர் இயக்கத்தில் விஜய் நண்பன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் அதிதி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என கூறப்படுகிறது.

Trending News