வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சும்மா யாரும் தூக்கி கொடுக்கல.. மட்டமான விமர்சனங்களால் விட்டு விளாசிய அதிதி சங்கர்

விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாக மாறியிருக்கிறார். அனைத்து யூடியூப் சேனல்களிலும் அவருடைய பேட்டி தான் களை காட்டி வருகிறது.

இந்நிலையில் அதிதி சங்கர் தன்னை பற்றி வரும் சில விமர்சனங்களுக்கு கடும் கோபத்துடன் பதிலளித்துள்ளார். அதாவது இயக்குனர் சங்கரின் மகள் என்பதால் தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு எளிதாக கிடைத்ததாகவும், அதை வைத்து தான் அவர் முன்னேறுவதாகவும் பல செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

இது போன்று தொடர்ச்சியாக வரும் விமர்சனங்களை கண்டு அதிதி சங்கர் தற்போது பொங்கி எழுந்துள்ளார். நான் நன்றாக பாடுவேன், விருமன் படத்தில் கூட ஒரு பாட்டு பாடி இருக்கேன். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

மேலும் எனக்கு இயல்பாகவே நடிப்பு, டான்ஸ் அனைத்தும் வரும். அதனால் தான் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததே தவிர என் அப்பா பெரிய இயக்குனர் என்பதால் வாய்ப்பு கிடைக்கவில்லை. டாக்டர் படிப்பை படித்து முடித்ததும் எனக்கு சினிமாவின் மீது இருந்த ஆசையால் என் அப்பாவிடம் நடிக்க விரும்புவது பற்றி கூறினேன்.

என் அப்பாவும் என்னுடைய ஆசைக்கு சம்மதித்தார். அது மட்டுமல்லாமல் சினிமா குறித்து நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார். கவர்ச்சியாக நடிப்பதற்கு அவர் நோ சொல்லிவிட்டார். அதனால் கவர்ச்சி இல்லாமல் ஹோம்லியான கதாபாத்திரங்களை தேடி நான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அதிதி பல நாட்களாக அவரைப் பற்றி வெளிவந்த விமர்சனங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இயல்பாகவே அதிதி ஜாலி டைப் என்பதால் அவருடைய கலகலப்பான பேச்சும், நடவடிக்கையும் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரஸ் செய்துள்ளது. அதனால் இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் இவர் ஒரு அசைக்க முடியாத இடத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News