Aditi Shankar: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் வரும் சித்ராதேவி பிரியா கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. இசை மழையில் நனைய தயாரா என சுனாமி வந்தது போல் காஜல் அகர்வால் பாடும் அந்த காட்சி இப்போதும் இணையதளத்தில் வெகு பேமஸ்.

ஆனா அதெல்லாம் என் முன்னாடி நிக்க கூட முடியாது என லைவ் பர்பாமன்ஸை கொடுத்து அலற வைத்திருக்கிறார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள். சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் ஆண்டவரின் மகள் ஸ்ருதிஹாசன் பாடல் பாடி அசத்தினார். அவருக்கு போட்டியாக ஷங்கரின் மகள் அதிதி டான்ஸ் ஆடியது மட்டுமில்லாமல் பாடலும் பாடினார். அதுதான் இப்போது பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த அளவுக்கு அவர் மோசமாக பாடியிருந்தார். ஏதோ ஒரு படத்துல பாட்டு நல்லா இருக்குன்னு ரசிச்சோம். அதுக்காக இப்படியா என நெட்டிசன்கள் கதறாத குறை தான். காதலன் படத்தில் வரும் பேட்டராப் என்ற பாடலை தான் அவர் பாடியிருந்தார்.

அதைத்தான் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். என்ன ஒரு கருமாந்திர வாய்ஸ், ஆத்தா நீ பாடாத ஆத்தா, வீடியோவாக பார்க்கும் நமக்கே இப்படின்னா லைவாக பார்த்தவர்கள் என்ன பாடுபட்டாங்களோ தெரியலையே என்பது போன்ற கமெண்ட்டுகளும் வரிசை கட்டுகிறது.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஆடிய பரதநாட்டியம் வேற லெவலில் கலாய்க்கப்பட்டது. அதை தொடர்ந்து இப்போது அதிதி தன் அப்பா மானத்தை வாங்கி இருக்கிறார்.
இதனால் நிச்சயம் சங்கர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். இது ஒரு புறம் இருக்க அதிதி பெரிய இயக்குனரின் மகள் என்ற பந்தா இல்லாமல் குழந்தை தனமாக இருக்கிறாங்க என அவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
இந்தியன் 2 மேடையை அலறவிட்ட அதிதி
- இந்தியன் 2 படத்தை ரிலீஸ் பண்ண கூடாது
- தடைகளைத் தாண்டி இந்தியன் 2 உடன் மோதுமா டீன்ஸ்.?
- அந்த 3 பேரை மொத்தமாக மறந்த கமல், சங்கர்