திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

செம ஸ்டைலா வேற மாதிரி ஆன ஷங்கர் மகள்.. புகைப்படத்தை பார்த்து காதலை சொல்லும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது மகளானஅதிதி ஷங்கர் தற்போது விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் அதிதி ஷங்கர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார்.

சமீபத்தில் விருமன் படத்தில் அதிதி ஷங்கர் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. எமோஷனல் காட்சிகளில் கூட அதிதி ஷங்கர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதாக படத்தின் இயக்குனர் முத்தையா தெரிவித்திருந்தார். மேலும் இப்படத்தில் அதிதி ஷங்கர் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும் எனவும் கூறியிருந்தார்.

அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளதால் அடுத்தடுத்து இனி வரும் படங்கள் அனைத்திலும் இவர் தான் அதிகமாக நடிப்பார். அதற்கு காரணம் எளிமையான தோற்றமும் அழகான முக பாவனை தான் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.

aditi shankar
aditi shankar

சமீபத்தில் விருமன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது விருமன் படத்தை முழுவதுமாக முடிந்துள்ளதால் படத்தை ப்ரோமோஷன் செய்யும் வேலையில் ஈடுபட உள்ளனர்.

அதிதி சங்கர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிடுவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது நடந்து வரும்படி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News