Actress Aditi shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன சங்கரின் மகளான அதிதி சங்கர் தற்போது ஹீரோயினாக ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் முதல் முதலாக விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக களம் இறங்கினார். அடுத்ததாக நேற்று ரிலீசான சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதில் அதிதி சங்கர் தன்னுடைய கேரக்டருக்கு அப்படியே ஆப்போசிட்டாக இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்ததாகவும் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல அதிதி சங்கர் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையைக் கேட்கும் போது, அந்த ஒரு அக்ரீமெண்ட் மட்டும் போட்டு விடுகிறார். ஏனென்றால் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி ஹிட் கொடுக்கிறார். அப்படி தான் விருமன் படத்தில் ‘மதுர வீரன்’ பாடலை பாடி பட்டிதொட்டி எங்கும் பேமஸானார்.
Also Read: மாவீரன் படத்தை தூக்கி நிறுத்திய 2 நபர்கள்.. சிவகார்த்திகேயன் எல்லாம் அப்புறம் தான்
அதே போல மாவீரன் படத்திலும் ‘வண்ணாரப்பேட்டையில’ என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடி ட்ரெண்டாக்கி உள்ளார். மேலும் அதிதி சங்கர் மாவீரன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் செய்தியாளர் இதைப் பற்றி கேட்டிருக்கிறார். நடிக்கிற படத்தில் பாடுவேனு கண்டிஷன் போட்டு தான் அந்த படத்திற்கு கமிட்டாகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அதிதி சங்கர், கண்டிஷன் எல்லாம் போடுவதில்லை ஆனால் என்னுடைய அப்பா சங்கருக்கு பாடுவது ரொம்ப பிடிக்கும். அதனாலேயே நான் மெடிக்கல் படித்துக் கொண்டிருக்கும் போது மறுபுறம் சங்கீதத்தையும் முறைப்படி கற்றுக்கொள்ள வைத்தார்கள். அதன்பிறகு நடிக்க வந்ததும் விருமன் படத்தில் பாடிய மதுரவீரன் பாடலுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால், மேலும் பாட வேண்டும் என விரும்புகிறேன்.
அதனால் தான் மாவீரன் படத்தின் கதையை சொல்லும்போதே இந்தப் படத்தில் எனக்கு ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைக்குமா என்று இயக்குனரிடம் கேட்டேன். அதன்பின் மாவீரன் பட பூஜையின் போது படத்தின் இசையமைப்பாளர் பரத் சங்கரிடமும் எனக்கு ஒரு பாடல் மட்டும் இந்த படத்தில் பாட வாய்ப்பு கொடுங்களேன் என கேட்டிருந்தேன். அதன் பிறகு தான் அவர் வண்ணாரப்பேட்டையில பாடலை பாட வாய்ப்பு கொடுத்தார்.
இனிவரும் படங்களிலும் நிச்சயம் ஏதாவது ஒரு பாடல் பாடி விடுவேன். ஆனால் அதற்காக படத்தின் கதையைக் கேட்கும்போதே கண்டிப்பாக அந்த படத்தில் ஒரு பாடல் பாடிய ஆகுவேன் என அடம் பிடிக்க மாட்டேன். கெஞ்சியாவது ஒரு பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பு வாங்கி விடுவேன் என அதிதி சங்கர் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
Also Read: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டாரு.. மாவீரன் படத்தால் நொந்து போன இயக்குனர்