திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விவாகரத்து நடிகருடன் ஜோடி போடும் அதிதி சங்கர்.. மாவீரனுக்கு பிறகு வரிசை கட்டும் வாய்ப்புகள்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி டாக்டர் படிப்பு படித்திருந்த போதிலும் நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக நடிகையாக மாறி இருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக விருமன் திரைப்படத்தில் அறிமுகமான அவர் இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து இவர் சத்தம் இல்லாமல் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதிலும் இப்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இப்போது விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Also read: மாவீரன் ரிலீசுக்கு முன்பே அடுத்த படத்தில் கமிட்டான அதிதி.. வாரிசு நடிகருக்கு ஜோடியாக அதிக சம்பளம்

அந்த வகையில் பத்து வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருந்தாலும் இவர் இன்னும் வளர்ந்து வரும் ஒரு நடிகராகவே இருக்கிறார். அதனாலேயே இப்போது அவர் தனக்கு மிகப்பெரும் வெற்றியை தேடி கொடுத்த ராட்சசன் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்து இருக்கிறார்.

அந்த படத்தில் தான் அதிதி சங்கர் ஹீரோயினாக கமிட் ஆகி இருக்கிறார். டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அதிதி எப்படி விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்தார் என்ற கேள்வி பலருக்கும் தோன்றலாம். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் ஒரே மேனேஜர் தான்.

Also read: ஜாதியை பார்க்கும் சிவகார்த்திகேயன்.. வலையில் சிக்கிய அதிதி ஷங்கர்

அவரின் முயற்சியாலேயே இந்த கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் மற்றொரு திரைப்படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். அதாவது நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் நடிக்கும் படத்தில் தான் அதிதி ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த படம் பிரான்சில் படமாக்கப்பட இருக்கிறது. அதிலும் இரண்டு மாத காலம் அங்கேயே சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். அதற்காக படக்குழுவினர் விரைவில் அங்கு செல்வதற்கும் வேலைகள் நடந்து வருகிறது. இப்படி அதிதியை தேடி அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பது மற்ற நடிகைகளின் வயிற்றில் புகையை கிளப்பி இருக்கிறது.

Also read: ஷங்கரின் வாரிசு என்பதால் அதிதிக்கு வாய்ப்பு கிடைக்கிறதா?. அருண் விஜய்யின் பதில்

Trending News