கொம்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா-கார்த்தி கூட்டணியில் உருவாகியிருக்கும் இரண்டாவது படமான விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகவுள்ளது. கார்த்திக்கு கதாநாயகியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தை கார்த்தியின் அண்ணன் சூர்யாவே, தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிற வைத்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கும் விருமன் படத்தில் ஒரு சூப்பர் பாடலை பாடிய விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி அந்த படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் இப்பொழுது அந்த படத்தில் அவர் பாடிய பாடலை அப்படியே நீக்கிவிட்டு, அதற்கு பதில் அதிதி சங்கரை பாட வைத்துள்ளனர். இப்பொழுது அதிதி சங்கர் பாடிய பாடல்தான் திரையில் வர இருக்கிறது.
இதை ராஜலட்சுமி இடம் தெரிவிக்காமலே அப்படியே உல்டா செய்து விட்டனராம். ராஜலட்சுமி ஏற்கனவே அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சாமி பாடலை பாடி சூப்பர் ஹிட் கொடுத்தவர். அப்படி இருக்கும்போது அவர் விருமன் படத்திற்காக சிறப்பாக பாடி இருப்பார்.
ஆனால் அந்தப் பாடலை நீக்கிவிட்டு அதிதியை பாடவைத்து விருமன் படக்குழு அவருக்கு துரோகம் செய்திருக்கிறது. புஷ்பா படத்தைப்போலவே விருமன் படத்தையும் சூப்பர் ஹிட் ஆவதற்கு ராஜலட்சுமியின் பாடல் காரணமாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இதை புரிந்து கொள்ளாமல் அதிதி குறுக்க பூந்து குட்டையை கிளப்பி உள்ளார்.