90களில் கவுண்டமனி செந்தில் காமெடிக்கு பிறகு அந்த இடங்களை சரியாக நிறைத்தவர்கள் சின்னக்கலைவானர் விவேக்கும் வைகைப்புயல் வடிவேலுவும் தான்.
ரஜினி கமல் விஜய் அஜித் உட்பட பல்வேறு நடிகர்களுடன் களமிறங்கிய வடிவேலு தனக்கென ஒரு காமெடி ரசிகர்களை உருவாக்கி வைததிருந்தார். இதனால் பலகோடி ரசிகர்களையும் பெற்றிருந்தார். இப்போதும் சமூக வலைகளில் மின்னும் பல மீம்ஸ்களின் உண்மையான சொந்தக்காரர் என்றாலும் மிகையாகாது.
சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வந்த 23ஆம் புலிகேசி படத்தின் வாயிலாய் நாயகன் அவதாராம் எடுத்தவருக்கு அதற்கு பிறகான படங்கள் சுமாராகவே ஓடியது.
மீண்டும் அதே கூட்டணியில் இம்சை அரசன் இரண்டாம் பாகம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
அப்போது வடிவேலுவுக்கும் ஷங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாய் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனால் ஏழு கோடிகள் வரை இழந்த ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்தார் பல்வேறு பஞ்சாயத்துக்களுக்கு பிறகு வடிவேலு சம்பளம் வாங்காமல் நடிக்க வேண்டும் என்கிற பேச்சு எழுந்தது இல்லையேல் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
சம்பளமின்றி நடிக்க வடிவேலு ஒத்துழைக்காததால் அவருக்கான வாய்ப்புகள் இல்லாமலே போனது. இப்போது இந்த பிரச்சினை மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார் மீம்ஸ் தலைவர் வடிவேலு. அடுத்ததாக 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்திலும் நடிக்க வாய்ப்பிருக்கும் என நம்பலாம். வடிவேலுவின் வரவுக்காக காத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களில் ஒருவராய் நாமும் காத்திருப்போம்.