கட்சியின் தலைமைகள் சரியில்லை என்றால் மாற்று கட்சி தேடுவது இயற்கையான விஷயம் தான். அந்த வகையில் தற்போது ராஜேந்திர பாலாஜி அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்று விட்டதாக செய்தி ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதனை தெளிவு படுத்தும் விதமாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையவில்லை என்றும் அவர் சொந்த வேலையாக டெல்லி சென்று உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே அதிமுக முக்கிய பிரமுகர்கள் சசிகலாவுடன் தொடர்பில் இருப்பது கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் இந்த நிலையில், இதுபோன்ற புரளியை கிளப்பிய சம்பவம் அதிமுக முக்கிய தலைவர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.
அவ்வப்போது சசிகலாவுடன் பேசிய ஆடியோ பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கும் அதிமுக கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். எந்த ஒரு சூழ்நிலையிலும் அதிமுக சசிகலாவை ஏற்றுக் கொள்ளாது என்பதை தெள்ளத் தெளிவாக உள்ளனர்.
அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு சென்ற சசிகலாவை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பார்த்து இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்தி விட்டார். தற்போது அதிமுக தொண்டர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.