அரசியல் பொருத்தவரை ஊழல் என்பது மக்கள் மத்தியில் சகஜமாகி விட்டது என்று தான் கூற வேண்டும். தமிழ்நாட்டில் ஊழல் செய்யாத கட்சிகளை இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆட்சிக்கு வந்த கட்சிகளும் சரி ஆட்சி வராத கட்சிகளும் சரி எல்லாருமே ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் தான். ஆனால் ஒவ்வொரு கட்சியினரும் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு சேவை செய்யும் நல்லவர்கள் போல் நடித்து வருகின்றனர்.
ஆனால் எல்லாம் தெரிந்த மக்களுக்கு என்ன செய்வது என்று தான் தெரியவில்லை ஊழல் செய்த கட்சியில் இருக்கும் தலைவர்களும் அவர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். வருடத்திற்கு வருடம் மாறும் அரசியல்வாதிகளும் ஊழல் செய்தவர்கள் தான். முதலில் இந்த கட்சியில் சேர்ந்து ஊழல் செய்து விடுவது அடுத்து இந்த கட்சி ஆட்சி வராது என்று தெரிந்துவிட்டால் அடுத்து கட்சிக்குத் தாவி அப்படியே ஊழல் செய்ய வேண்டியது இதுவே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அதிமுகவின் கட்சியை சேர்ந்த கோவை மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரான எஸ்ஏ வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் 464 கோடி ஊழல் செய்துள்ளதாகவும் கோவை மாநகராட்சி ஒப்பந்தத்தில் 346 கோடி ஊழல் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் இன்கம்டாக்ஸ் ரெய்டு ஆளும் திமுக கட்சி செய்துள்ளதாக அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஊழல் சம்பந்தப்பட்டவர்கள் விவரங்கள் வெளியாகும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அடுத்த கட்டமாக பல அமைச்சர்களின் வீட்டிலும் சோதனையிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதற்கு எதிர்க்கட்சித் தொண்டர்கள் பலரும் ஊழல் யார் செய்யாமல் இருக்கிறார் ஏன் இப்போது ஆளும் கட்சியாக இருக்கும் இவர்கள் மட்டும் ஊழல் செய்யவில்லை இவர்கள் எத்தனை ஊழல் செய்துள்ளார்கள் எத்தனை வழக்குகளை சந்தித்து உள்ளார்கள் என்பது எல்லாருக்குமே தெரியும் தற்போது ஊழல் இல்லாத ஆட்சியை காட்டுவதற்காக இப்படி செய்து வருகிறார்கள் என அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.