அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் விஜய் கட்சி மாநாட்டில் தீபாவளி பட்டாசாய் வெடித்து சிதறினார். ஒவ்வொரு விஷயத்தையும் தமிழக வெற்றி கழகம் பார்த்து பார்த்து செய்துள்ளது. மலை குறிக்கிடும் என்று எதிர்பார்க்கையில் வருண பகவான் விஜய்க்கு வழி விட்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்த செய்தார்.
இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக்கு கிட்டத்தட்ட 500 குழுக்களை நியமித்துள்ளனர்/ ஒவ்வொரு குழுக்களுக்கும் தனித்தனியே 100 முதல் 150 வரை வேலையாட்களை பணியமத்தியுள்ளனர். இப்படி நடைபெற்ற மாநாட்டில் ஓரிரு அசம்பாவிதங்களைத் தவிர மற்றபடி சிறப்பாய் நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அடிப்படை வசதிகளிலிருந்து மருத்துவ வசதி வரை எல்லாம் செய்யப்பட்டிருந்தது.
150 மருத்துவர்களும் 200க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் வண்டிகளும் இந்த மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தது. ஏற்கனவே விஜய் வயதானவர்கள் , கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமியர் இந்த மாநாட்டிற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தார். ஆனால் விஜய் எதிர்பார்த்ததை விட மாநாட்டில் அதிக மக்கள் கூடி திக்கு முக்காட வைத்தனர்.
புஷி ஆனந்த் இந்த மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 55 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் அனுமதி வாங்கி இருந்தார் ஆனால் அங்கே வந்து குவிந்தவர்கள் 2 லட்சம் மக்கள். இப்படி எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு மக்கள் வந்ததால் கிட்டத்தட்ட விக்கிரவாண்டியில் 10 கிலோமீட்டர் டிராபிக் உருவானது ஆனால் அதுவும் சீர் செய்யப்பட்டது.
மாநாட்டில் விஜய் தனது மனதில் உள்ள அனைத்தையும் பேசி தீர்த்து விட்டார். உங்களுக்காக எனது கேரியரை விட்டுவிட்டு உங்களை நம்பி வந்திருக்கிறேன் என விஜய் பேசுகையில் மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. விஜய் இந்த அரசியல் பிரவேசத்தை 10 வருடங்களாக திட்டம் தீட்டி செய்திருக்கிறார். ஏற்கனவே இவர் அரசியல் ஆசையை தட்டி வைப்பதற்கு ஜெயலலிதா அம்மையார் பல விதத்தில் இவருக்கு குடைச்சல் கொடுத்தார்.
தலைவா பட ரிலீஸ் நேரத்தில் அந்த படத்தை வெளியிடுவதற்கு தடை போட்டு பல விதத்தில் தொந்தரவு செய்தது அதிமுக அரசு. எல்லாமும் ஆறா வடுவாய் இப்பொழுது விஜய்யை அரசியல் பிரவேசம் எடுக்க தூண்டி உள்ளது. நடிகனாகிய நமக்கே இப்படி ஒரு பிரச்சனை என்றால் நாட்டு மக்கள் என்ன பாடுபடுவார்கள் என களத்தில் இறங்கி விட்டார் தளபதி.