சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

அல்லக்கைகளை நம்பி இறங்காதீங்க விஜய்.. புஸ்ஸி வைத்து தளபதிக்கு K ராஜன் வைத்த கொட்டு – வீடியோ

Vijay-TVK: விஜய் கட்சி ஆரம்பித்த அடுத்த நிமிடத்தில் இருந்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் அவருக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்தாலும் நடிகர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற கருத்துக்கள் தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அரசியல் பயணத்திற்காக நீண்ட காலம் தன்னை பக்குவப்படுத்தி வந்த விஜய் இதையெல்லாம் எதிர்பார்த்துதான் கட்சியை தொடங்கியிருப்பார். ஆனாலும் அவருக்கு எதிரான பேச்சுக்களும் அப்படி என்ன செய்து விடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு பட வெளியீட்டு விழாவின் போது, விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து தன் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதில் அவர் கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் இப்ப இல்ல. அதேபோல் எம்ஜிஆரை பார்த்து அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் அவருடைய அடிச்சுவடை கூட தொட முடியாது.

Also read: வாங்க இங்கிட்டு போதும்!. விஜய் அரசியல் குறித்து வைகைப்புயல் சொன்ன நச் பதில்

ஏனென்றால் எம்ஜிஆர் மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தார். மக்களோடு மக்களாக இறங்கி தொண்டு செய்தார். ஒரு காலத்தில் தான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதை மற்றவர்கள் படக்கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்தார்.

அதில் 20 சதவீதமாவது விஜய் செய்ய வேண்டும். ஆனால் புத்திசாலித்தனமாக கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே மாணவர்களுக்கான நலத்திட்டங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் என அவர் செய்திருக்கிறார்.

அதனால் அவர் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் புஸ்ஸி ஆனந்த் போன்றவரை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இறங்கி வேலை செய்யணும், விஜய் அதை செய்வார் என்று நம்புகிறேன் என அட்வைஸ் செய்துள்ளார்.

Also read: அவசரமாக நடந்த TVK ஆலோசனைக் கூட்டம்.. அக்கட தேசத்திலும் அரசியல் செய்ய போகும் விஜய்

Trending News