ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினி பட நடிகரை புக் பண்ணவே பயப்படும் யூனிட்.. வளரும் போதே மண்ணை போட்டு மூடிய ஆட்டிட்யூட்

Actor Rajini : ரஜினியின் ஒரு படத்திலாவது வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் காத்து கிடைக்கின்றார்கள். ஏனென்றால் அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைத்து விடும். அப்படி பிரபல வில்லனுக்கு அசால்ட்டாக ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

ஆனாலும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய் உள்ளது. இதற்கு காரணம் மோசமான கேரக்டர் மற்றும் அவர் மீது உள்ள அடுக்கடுக்கான வழக்குகள் தான். அதாவது ரஜினிக்கு மாஸ் ஹிட் கொடுத்த படம் ஜெயிலர். இந்த படத்தில் கொடூர வில்லனாக வருமன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் விநாயகன்.

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இவரை பெரிதும் அடையாளப்படுத்தியது ரஜினியின் ஜெயிலர் படம் தான். ஆனாலும் அடுத்தடுத்த படங்களில் இவருக்கு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள். அதாவது படப்பிடிப்பு தளத்திலேயே குடித்துவிட்டு பிரச்சனையில் ஈடுபடுகிறாராம்.

Also Read : குட்டி ரஜினியாக நடித்த படிக்காதவன் பட ஹீரோ அதிர்ச்சி மரணம்.. ஐயோ சமுத்திரம் பட நடிகையின் கணவரா.?

அதோடு அவர் மீது எக்கச்சக்கப் பிரிவுகளில் வழக்கு இருக்கிறதாம். அதில் ஒன்று பெண்களுக்கு எதிரான வழக்கில் சிக்கி உள்ளார். ஆகையால் நல்ல நடிப்பு திறமை இருந்தும் பட வாய்ப்புகள் கொடுக்க தயங்கி வருகிறார்கள். இதுவே விநாயகனின் கேரியரில் பிளாக் மார்க் ஆக அமைந்துள்ளது.

தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் இப்போது விநாயகனுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கி இருக்கிறது. இவ்வாறு வளரும் போதே தன்னுடைய ஆட்டிட்யூட்டால் மண்ணை போட்டு மூடிவிட்டார். ஏற்கனவே அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read : ரஜினியின் அடிமடியில் கை வைத்த லைக்கா.. பெத்த பாவத்துக்கு ஆண்டியான தலைவர்..!

Trending News