வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

10 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை.. சசிகுமாருடன் ஜோடி

சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவும் செய்திருப்பார். அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார்.

ஈசன் படம் சரியாக ஓடாததால் அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், பேட்ட, கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நாயகனாக மட்டுமல்லாமல் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக சில படங்களிலும் நடித்துள்ளார்.

இயக்குனர் சத்யசிவா கழுகு படத்திற்கு அடுத்ததாக இயக்கிய சிவப்பு, சவாலே சமாளி, கழுகு 2 ஆகிய படங்கள் சரியாக ஓடவில்லை. தற்போது இவர் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஹரிப்பிரியா நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர், சத்யசிவா இயக்கும் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.

sasikumar-hari-priya
sasikumar-hari-priya

தற்போது சசிகுமார் கைவசம் எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா, உடன்பிறப்பு என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Trending News