திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

10 வருஷ நம்பிக்கை வீணா போகல.. தளபதி-68 இயக்குனரே உறுதியா தெரியல, ஆனா இசையமைப்பது இவரா?

கடந்த சில நாட்களாகவே எங்கு பார்த்தாலும் தளபதி 68 குறித்த பேச்சு தான். இந்தப் படத்தை யார் இயக்குவது என போட்டா போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் 10 வருஷத்துக்கு கிடைத்த தவம் போல் தளபதி 68 படத்தின் வாய்ப்பை கலகலப்பான இயக்குனருக்கு தூக்கிக் கொடுத்திருக்கிறார் விஜய்.

சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு போன்ற படங்களையும் சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தையும் இயக்கிய வெங்கட் பிரபு தான் விஜய்யின் 68-வது படமான தளபதி 68 படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டது. ஆனால் இதை சற்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இந்த பட வாய்ப்பை தட்டி தூக்க வேண்டும் என தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி முதல் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா என பலரும் வரிசை கட்டி காத்திருந்தனர்.

Also Read: விஜய்க்காக இறங்கி வந்த பவானி.. ஷாக் மேல் ஷாக் கொடுத்து லோகேஷ் செய்யும் சம்பவம்

ஆனால் அவர்களுக்கெல்லாம் கொடுக்காமல், வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்தில் இணையும் முடிவில் விஜய் உறுதியாக இருக்கிறார். இந்த தகவல் உறுதியானது என கூறப்படுகிறது. விஜய் திடீரென ஒரு கலகலப்பான படத்தை பண்ண வேண்டும், அதுவும் குறைந்த நேரத்தில் படப்பிடிப்பு முடித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆகையால் தான் லியோ படத்தை முடித்து ஒரு கூலான ஜாலியான ஒரு படத்தை பண்ண வெங்கட் பிரபுவை தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்திவிட்டார்.

வெங்கட் பிரபுவும் நீண்ட நாட்களாக விஜய்யின் படத்தை இயக்க வேண்டும் என ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் இடம், ‘எப்போது அண்ணா இருவரும் சேர்ந்து படம் பண்ண போகிறோம்’ என்று ஏக்கத்துடன் கேட்டிருக்கிறார். கூடிய விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன் என்றும் மிகுந்த நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்தார்.

Also Read: ஒரு வழியா தளபதி தப்பிச்சிட்டாரு.. விஜய் 68 படத்தை இயக்கும் கலகலப்பான இயக்குனர்

அந்த நம்பிக்கை எல்லாம் இப்போது நினைவாக்கி இருக்கிறது. வெங்கட் பிரபு விஜய்யிடம் 9 வருடத்திற்கு முன்பு ஏக்கத்துடன் கேட்ட அந்த ட்விட்டர் பதிவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. அது மட்டுமல்ல இந்த படத்திற்கு யார் இசையமைக்கிறார் என்பதுதான் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் விஜய்யுடன் 10 வருடத்திற்கு முன்பு புதிய கீதை படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்திற்கு இசையமைக்கப் போகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் அல்லது ஆர்பி சௌத்ரியின் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தயாரிக்க உள்ளனர்.

Also Read: காது குத்திய லோகேஷ்.. ரொம்ப பேசக்கூடாது, படத்தில் வில்லனுக்கு பெரிய ஆப்பு

Trending News