பொன்னியின் செல்வன் போல் உருவாகும் நாவல்.. 12 வருடம் கழித்து சர்ச்சை கதையை இயக்கும் சசிகுமார்

ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் வியக்க வைத்த சசிகுமார் சுப்பிரமணியபுரம், ஈசன் திரைப்படங்களுக்கு பிறகு முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். அவருடைய எதார்த்தமான நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் தான் ஒரு இயக்குனர் என்பதே மறந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தாலும் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. இதனால் அவர் மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பி இருக்கிறார். அதாவது 12 வருடங்களுக்கு பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

Also read: ஜிபி முத்துவுக்கு கோரிக்கை வைத்த சசிகுமார்.. பிக்பாஸ்க்கு பின் இருக்கும் முக்கிய பொறுப்பு

அதிலும் ஒரு சர்ச்சையான கதைக்களத்தின் மூலம் அவர் தன்னுடைய ரீ என்ட்ரியை தொடங்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே இந்த விஷயம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும் தற்போது இந்த தகவல் உறுதியாகி இருக்கிறது. அதாவது சசிகுமார் குற்றப்பரம்பரை என்னும் மிகப்பெரும் வெற்றி பெற்ற நாவலை படமாக்க இருக்கிறார்.

சமீப காலமாக நாவல்களை படமாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு தான் இந்த ஆர்வம் அனைவருக்கும் தலை தூக்கி இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே குற்ற பரம்பரை நாவலை படமாக்குவதற்கு பாரதிராஜா, பாலா ஆகியோர் தொடர்ந்து போட்டி போட்டு வந்தனர். ஆனால் தற்போது இந்த வாய்ப்பு சசிகுமாருக்கு சென்றிருக்கிறது.

Also read: பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் புலம்பி வரும் சுந்தர் சி.. 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் பிரம்மாண்ட படம்

மேலும் வெப் தொடராக உருவாக இருக்கும் இந்த நாவலை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க இருக்கிறார். அதை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. எட்டு எபிசோட்களாக வெளிவர இருக்கும் இந்த தொடர் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பமாக இருக்கிறது.

மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் ராணா நடிக்க இருக்கிறார்கள். அதிலும் இரண்டாம் பாகத்தில் இவர்களுக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்குமாம். இப்போது வெளிவந்திருக்கும் இந்த தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சர்ச்சையை கிளப்பிய இந்த நாவல் படமாக போவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: பொன்னியின் செல்வனுக்கு முந்திக்கொண்ட ரஜினி.. ரணகளமாக வெளியான ஜெயிலர், இந்தியன் 2 பட ரிலீஸ் தேதி