செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

20 வருடம் கழித்து மணிரத்னத்துடன் இணைந்துள்ள ஜாம்பவான்.. கூடவே இருந்தும் நடிக்காத 80ஸ் ஹீரோயின்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டு வருகிறது. எதிர்பார்த்ததற்கும் மேலாக கிடைத்துள்ள அமோக ஆதரவால் பட குழுவினர் அனைவரும் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

இந்த வெற்றிக்கு மணிரத்னம் ஒரு வகையில் காரணமாக இருந்தாலும் பிரம்மாண்டமான செட், ஒளிப்பதிவு, பின்னணி இசை, அற்புதமான நடிப்பு என அனைத்தும் சேர்ந்து தான் இந்த பொன்னியின் செல்வனை மாபெரும் வெற்றி பெற வைத்துள்ளது.

Also read : மணிரத்தினம் கிட்ட கத்துக்கோங்க ராஜமவுலி.. சொதப்பலை குத்தி காட்டும் ரசிகர்கள்

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் மணிரத்னத்துடன் இணைந்திருக்கும் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து அவர் மணிரத்தினத்துடன் இணைந்து இருக்கிறார். 72 வயதாகும் இவர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி, மௌன ராகம், தளபதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஒன்றாக பணிபுரிந்து இருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் இவர் பணிபுரிந்துள்ளார். அதற்காக தேசிய விருது உட்பட பல விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார். இந்த அளவுக்கு ஒரு ஜாம்பவானாக விளங்கும் இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட செட்டுகள் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

Also read : கேவலமாய் ப்ரமோஷன் செய்த சுஹாசினி, விக்ரம்.. வேண்டா வெறுப்பாய் பேசிய பேச்சு

இப்படி தன்னைச் சுற்றி பல ஜாம்பவான்களை வைத்திருப்பது தான் மணிரத்தினத்தின் பக்க பலமே. ஆனால் கூடவே இருந்தும் பல வருடங்களாக ஒரே ஒரு பிரபலத்தை மட்டும் இவரால் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. அவர் வேறு யாரும் அல்ல மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி தான்.

80 காலகட்ட முன்னணி ஹீரோயின் ஆக இருந்த இவர் மணிரத்தினத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தயாரிப்பு பணிகளில் மட்டுமே தன் கணவருக்கு உதவியாக இருக்கும் இவர் ஒரு முறை கூட மணிரத்தினம் இயக்கத்தில் நடித்தது கிடையாது. இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.

ஆனால் மணிரத்னம் இயக்க வந்த புதிதில் சுஹாசினியை தன் படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார். அவர் அதற்கு முடியாது என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதனால் தான் அவரை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்று ஒரு முறை மணிரத்தினம் விளையாட்டாக பேசியிருந்தார். அந்த வகையில் சுஹாசினி ஏன் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பதுதான் இப்போது பலரின் கேள்வியாக இருக்கிறது.

Also read : மணிரத்தினத்தை வைத்து காய் நகர்த்திய சுஹாசினி.. வைரமுத்துவின் கேரியர் சோலி முடிஞ்சிருச்சு

Trending News