வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பாபா படத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்து.. 20 வருடமாக ரஜினியுடன் நடிக்காத பிரகாஷ்ராஜ்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பவர்புல் நடிகர் இருந்தால் அவருக்கு ஏற்ற சரியான வில்லனாக இருப்பது பிரகாஷ்ராஜ் தான்.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக செய்பவர். ரஜினியின் படையப்பா படத்தில் கூட கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் அதிகாரியாக சில நிமிடங்கள் நடித்திருப்பார்.

அதன்பிறகு பிரகாஷ்ராஜை பிடித்துப்போய் பாபா பட வாய்ப்பை கொடுத்தாராம் ரஜினிகாந்த். பாபா படத்தில் வரும் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் முதலில் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்ட அட்வான்ஸ் கொடுத்து சில காட்சிகளில் நடித்து முடித்து விட்டாராம்.

பாபா ரஜினியின் சொந்த கதை என்பதால் அதில் அரசியல்வாதிகளுக்கான காட்சிகளை குறைத்துவிட்டு சாமியார் காட்சிகளை அதிகப்படுத்தி விட்டாராம். இதுகுறித்து பிரகாஷ்ராஜிடம் தெரிவிக்க, மாற்றம் இருந்தால் பரவாயில்லை, ஆனால் கேரக்டரின் முக்கியத்துவம் குறையக் கூடாது என கேட்டுக் கொண்டாராம்.

அதன் பிறகு கதை கேட்ட பிரகாஷ்ராஜ், தன்னுடைய கேரக்டரில் முக்கியத்துவம் இல்லை என சொல்லி அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இது ரஜினியின் காதுக்கு செல்ல, அவரும் தப்பு நம்முடையது தான், இதனால் பிரகாஷ்ராஜை குறை சொல்ல ஒன்றும் இல்லை எனவும், அவரிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை வாங்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டாராம்.

அதன் பிறகு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து தற்போது தான் ரஜினியுடன் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

rajini-prakashraj-cinemapettai
rajini-prakashraj-cinemapettai

Trending News