ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சேரன் பட சாயலில் 20 வருடத்திற்குப் பின் கிடைத்த அமோக வரவேற்பு.. ஹவுஸ் ஃபுல்லாக ஓடும் படம்

நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவை கலக்கிய இயக்குனர் சேரன் இப்பொழுது படங்கள்  இயக்குவதை  குறைத்து கொண்டார்.  2004 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் என்னும் ஒரு மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து ரசிகர்களை கட்டிப் வைத்தார்.

இப்பொழுது அதே சாயலில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி இருக்கும் சீதாராமன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. துல்கர் சல்மான் நடித்த இந்த படம்  கிட்டத்தட்ட 200 தியேட்டர்களில் தமிழ்நாட்டில் ரிலீசானது.

ஒரு டப்பிங் படத்திற்கு இவ்வளவு தியேட்டர்கள் கிடைப்பது ஆச்சரியம்தான். படம் நன்றாக ஓடியதால் கூடுதலாக 50 தியேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபுடி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் ராணுவ அதிகாரியாக ராம் என்ற கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

இதில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா காஷ்மீரைச் சேர்ந்த ஆஃப்ரீன் என்ற பெண்ணாக நடிக்கிறார். வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தத் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

சேரன் தமிழில் இயக்கிய சூப்பர் ஹிட் படங்களாக ஆட்டோகிராப், பொக்கிஷம் போன்ற படங்களின் தழுவல்தான் சீதாராமன் திரைப்படம். ஒரு ரீமேக் படத்துக்கு இப்படி வரவேற்பு கிடைத்திருப்பது திரையுலகை ஆச்சரியப்படுத்துகிறது.

20 வருடங்களுக்குப் பிறகும் ஆட்டோகிராப் படத்திற்கு கிடைத்த அதே வரவேற்பு, அந்தப் படத்தின் தழுவல் படமான சீதாராமன் திரைப்படமும் வெளியான ஒரே வாரத்திற்குள் வசூல் ரீதியாகவும், விமர்சன வாயிலாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Trending News