வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

20 வருஷத்திற்கு பின் இணையும் ஜோடி.. டாப் ஹீரோக்களுடன் திரிஷா

Trisha : பொன்னியின் செல்வன் படத்தின் என்ட்ரி திரிஷாவுக்கு ஒரு நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் த்ரிஷாவுடன் ஜோடி போட்ட ஹீரோக்கள் எல்லாம் இப்போது டாப் ஹீரோக்களாக மாறிவிட்டனர். நடிகைகளை பொருத்தவரை குறிப்பிட்ட காலம் மட்டுமே உச்சத்தில் இருக்க முடியும்.

அதன் பிறகு அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்க வந்து விடுவார்கள். ஆனால் திரிஷா சினிமாவில் பல வருடங்களாக பயணித்தாலும் அவரது மார்க்கெட் இப்போது வரை மவுசு குறையாமல் இருக்கிறது. இதற்கு காரணம் அவரது அழகை தற்போது வரை மெயின்டைன் செய்து வருகிறார்.

இந்த சூழலில் விஜய்யின் லியோ படத்தில் ஜோடி போட்ட த்ரிஷா, கோட் படத்திலும் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனமாடி இருந்தார். இதைத்தொடர்ந்து அஜித் உடன் அடுத்த இரண்டு படங்களில் திரிஷா கமிட்டாகி கதாநாயகியாக நடித்து வருகிறார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் திரிஷா கைவசம் இருக்கிறது.

20 வருடத்திற்கு பிறகு மீண்டும் டாப் ஹீரோவுடன் ஜோடி போடும் திரிஷா

இது தவிர மணிரத்தினம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். இந்நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகு சூர்யாவுடன் ஜோடி போட இருக்கிறார்.

மௌனம் பேசியதே மற்றும் ஆறு படங்களில் சூர்யாவுடன் திரிஷா இணைந்து நடித்திருந்தார். இப்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது.

இது த்ரிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இவ்வாறு பல வருடங்களுக்குப் பின்பு தன்னுடன் நடித்த ஹீரோக்களுடன் திரிஷா மீண்டும் ஜோடி போட்டு ஹிட் கூட எடுத்து வருகிறார். இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள நடிகைகள் மிகுந்த அப்சட்டில் உள்ளனர்.

Trending News