சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

3 ஆண்டுகளுக்குப் பின் தூசி தட்டப்படும் இயக்குனர் அமீரின் படம்.. அடுத்த பருத்திவீரன் ரெடியா.?

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அமீர். முன்னணி இயக்குனரான பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் அமீர், சூர்யா நடிப்பில் உருவான மௌனம் பேசியதே படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை நிலை நாட்டினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சூர்யாவிற்கும் இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதனைத்தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவான ராம் படத்தை அமீர் இயக்கி இருந்தார். தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பாசத்தை உணர்த்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இன்றுவரை இப்படமும் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் பிரபலமாக உள்ளன.

இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவான பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கி இருந்தார். முழுவதும் கிராமத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. மேலும் இப்படம் மூலமாகவே நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ந்து அமீர் இயக்கத்தில் வெளியான படங்கள் வெற்றி பெற்று வருவதால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.  எனவே அதன் பின்னர் தற்போது வரை அமீர் படங்களை இயக்கவில்லை.

அதற்கு மாறாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு பரவலாக அனைவரது பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்யா மற்றும் ஆர்யாவின் தம்பி சத்யா ஆகியோரை வைத்து சந்தனத்தேவன் என்ற படத்தை இயக்கி நடிக்க அமீர் முடிவு செய்திருந்தார்.

ameer-cinemapettai-01
ameer-cinemapettai-01

அறிவித்தது போலவே சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகளால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் என்ற நிறுவனம் கைப்பற்றி தயாரிக்க உள்ளதாம். எனவே மீண்டும் ஆர்யா சத்யா மற்றும் அமீர் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News