திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

எனக்கு ஒரு ஹிட் கொடுங்க.. பிரபல இயக்குனரிடம் தஞ்சமடைந்த தல அஜித்

சினிமாவில் வெற்றி தோல்விகள் சகஜம் தான். அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கும் கதாநாயகர்களுக்கு இயக்குனர்கள் வாய்ப்பு தருவது என்பது அவ்வளவு எளிதல்ல. சமீபத்தில் பிரபல இயக்குனர் அளித்த பேட்டியில் 4 படங்கள் தோல்விக்குப் பின் அஜித் குமார் என்னிடம் வாய்ப்பு கேட்டதாக கூறியுள்ளார்.

அதாவது காதல் மன்னன் என்ற சூப்பர்ஹிட் படத்திற்கு பின்னர் அஜித்திற்கு 4 படங்கள் வெளிவந்துள்ளது. அந்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் தொடரும் என்ற படத்தை பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கிருஷ்ணா இயக்கிய இருப்பர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தல அஜித் சுந்தர் சி-யை சந்தித்துள்ளார். அப்பொழுது தொடர்ந்து 4 படங்கள் தோல்வியை சந்தித்துள்ளேன், அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு உள்ளாராம்.

அப்படி உருவான படம் தான் உன்னைத்தேடி, இந்த படம் ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்காகும் இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக மாளவிகா நடித்திருப்பார்.

சிவகுமார், கரன் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் சாதனை என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்னர் தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வாலி படத்தில் இரட்டை வேடத்தில் களம் இறங்கினார் தல அஜித்.

ajith old photos
ajith old photos

அதற்குப்பின் அஜித்தின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்று தான் கூற வேண்டும். இதுபோன்ற ரகசியத்தை சுந்தர் சி கூறியிருப்பது ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு கஷ்டங்களை சந்தித்து தான் தல அஜித் தற்போது கோடான கோடி ரசிகர்களை சேர்த்துள்ளார்.

Trending News