புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சைரனை ஜெயம் ரவி மட்டும் நம்பி இல்ல.. 8 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்

Actor Jayam Ravi- Siren Movie: மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை தவிர சமீப கால அளவில் ஜெயம் ரவியின் படங்கள் எதுவும் ஓடுன மாதிரி தெரியவில்லை. அதுவும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி தனியாக நடிக்கவில்லை, ஒரு திரை பட்டாளமே இணைந்து நடித்தது. இப்பொழுது ஜெயம் ரவி ரொம்பவே நம்பிக்கையுடன் இருப்பது சைரன் படத்தை தான்.

அவருக்கு மட்டுமல்ல இந்த படத்தில் எட்டு வருடத்திற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகையும் ரொம்பவே நம்பி இருக்கிறார். அந்தோணி பாக்கியராஜ் இயக்கி இருக்கும் சைரன் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இவர்களுடன் கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, யோகி பாபு, யுவினா பார்த்தவி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Also Read: அப்போ வானதி இல்லையா.? சமந்தா, நாக சைதன்யாவுக்கு விரைவில் திருமணம்

எதிர்பார்ப்பை மிகைப்படுத்திய சைரன்

யூ ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட இந்த படம் ஆக்சன் நிறைந்த திரில்லர் கதையில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி படத்தில் கதாநாயகியாக வைத்திருக்கிறார். அதன் பின் மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தவிர, எட்டு வருடங்களாக தமிழில் இவருக்கு சரியான வாய்ப்பே கிடைக்கவில்லை.

இப்போது சைரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியின் மனைவி கேரக்டரில் நடிக்கிறார். இவரை படத்தில் கொன்று விடுவார்கள். இவரை சுற்றி தான் முழு கதையுமே நகரும். இந்தப் படம் வெற்றி பெற்றால் ஜெயம் ரவிக்கு மட்டுமல்ல அனுபமா பரமேஸ்வரனும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வாய்ப்பிருக்கிறது.

Also Read: கோடிகளில் புரளும் குந்தவை.. 40 வயதில் திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு

Trending News