வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சாய் பல்லவிக்கு பின் நடனத்தில் ஆட்டி படைக்க போகும் ஹீரோயின்.. இப்பவே சூர்யா துண்டு போடும் பெண் பிரபு தேவி

After Actress Sai Pallavi, the heroine is going to rock in dance: தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிப்பின் மூலமும், நடனத்தின் மூலமும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி.  தற்போது நடிகைகளுக்கு நடிப்பு திறமையுடன் நடனத்திலும் ஸ்கோர் செய்தால் மட்டுமே திரையில் நீடிக்க முடியும் என்ற நிலை நிலவுகிறது.

வளர்ந்து வரும் நடிகைகள் கவர்ச்சியுடன் புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடி வரும் நிலையில் தெலுங்கு நடிகை ஒருவர் நடனத்தை  ஆயுதமாகக் கொண்டு பலரது கவனத்தையும் தன் மீது  திருப்பி உள்ளார்.  தெலுங்கு திரை உலகை ஆட்டிப்படைக்கும் அந்த இளம் ஹீரோயின் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்த ஸ்ரீலீலா.

அமெரிக்காவாழ் இந்தியரான ஸ்ரீ லீலா கனவு என்னவோ மருத்துவர் ஆவது தானாம்.  வாழ்வில் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத நிகழ்வுகள் நடப்பது போல இவரது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பார்த்த கன்னட இயக்குனர், இவருக்கு கன்னட படமான கிஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

Also read: அஜித், விஜய் படத்தை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி கூறிய காரணம்.. கேப்பில் ஸ்கோர் செய்த த்ரிஷா

முதல் படத்திலேயே அதிக கவனத்தை ஈர்த்த ஸ்ரீ லீலா, சிறந்த நடிகைக்கான விருதை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் வென்றார். தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வரும் போது 2021 ல் பெல்லி சாண்டாடி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார்.

சிறு வயதிலேயே பரதநாட்டிய  கலையை முறையாக கற்றுக் கொண்ட ஸ்ரீ லீலா நடனத்தின் அனைத்து கஷ்டமான ஸ்டெப்புகளையும் அசால்ட் ஆக போட்டு விடுவாராம். சமீபத்தில்  பொங்கலுக்கு வெளியான மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தில் அவருக்கு இணையாக குத்து டான்ஸ் போட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் ஸ்ரீலிலா. மகேஷ் பாபு உடன் மடத்த பெட்டி என்ற பாடலுக்கு ஸ்ரீ லீலா ரப்பர் போல் ஆடுவதை பார்த்தவர்கள் பிரபுதேவா போல் ஆடும் பிரபு தேவி என்கிறார்கள்.

தனது நடன திறமையால் தெலுங்கு திரை உலகை கிரங்கடித்து வரும் இந்த இளம் புயல் ஸ்ரீ லீலாவை தனது படங்களில் நடிக்க வைக்க நடிகர்கள் பலரும் போட்டி போட்டு காத்துக் கிடக்கின்றனர். இது மட்டுமா தமிழிலும் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலாவை  நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.

Also read: விஸ்வரூபம் எடுக்கும் வாடிவாசல் பஞ்சாயத்து.. சூர்யாவுக்கு பதில் என்ட்ரி ஆகும் ஆஸ்தான நடிகர்

Trending News