ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் படம் பெரிய அளவு வசூல் ரீதியாக போகவில்லை என்றாலும் அதில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் ஜெயம் ரவி.
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் நம்பப்படும் மினிமம் கேரண்டி இயக்குனராக வலம் வருபவர் ஜெயம் ரவி. வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய தனித் திறமையால் இன்னமும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்.
மேலும் ஜீரோ ஹேட்டர்ஸ் நடிகர்களில் இவரும் ஒருவர். அதாவது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் என்று பொருள். இவரும் கடந்த சில வருடங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் சுத்தமாக பட வாய்ப்பே இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.
அதன் பிறகுதான் ரோமியோ ஜூலியட், பூலோகம், தனி ஒருவன் போன்ற படங்கள் வெளியாகி ஜெயம் ரவி இழந்த மார்க்கெட்டை மீட்டெடுத்தன. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் வசூல் நாயகனாக உயர்த்தியது.
இந்நிலையில் பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் ஜெயம் ரவி. அந்தப் படத்தில் ஆதிபகவன் படத்திற்கு பிறகு மீண்டும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
வடசென்னையை மையமாக கொண்டு உருவாகும் கேங்ஸ்டர் படமான இந்த புதிய படத்தில் பூலோகம் படத்தை போலவே வெரைட்டியான கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.