சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

தொடர்ந்து பட வாய்ப்பு, மாஸ் நடிகரை வளைத்து போட்ட நடிகை.. கூத்தாடியா! ஹோட்டல் வரை சென்று வேவு பார்த்த மனைவி

அடுக்குமொழி வசனம் பேசும் இயக்குனருடன் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஒருவர், அதன் பிறகு தொடர்ந்து மாஸ் ஹீரோவின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது மாஸ் ஹீரோவுக்கும் அந்த நடிகைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் அந்த சமயத்தில் மாஸ் ஹீரோவிற்கு திருமணம் ஆகி 2 குழந்தைங்களுக்கு அப்பாவாக இருந்திருக்கிறார். இருந்தாலும் அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு மாஸ் நடிகர் நடிக்கக்கூடிய படங்களில் எல்லாம் அந்த நடிகை சிபாரிசு செய்து வரிசையாக பட வாய்ப்புகள் பெற்றுத் தந்துள்ளார்.

Also Read: ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கூடிய சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லப்பட்டது. இந்த செய்தி மாஸ் நடிகரின் மனைவிக் காதிலும் விழுந்தது. ஏற்கனவே மாஸ் ஹீரோ குடித்துவிட்டு பெண்களுடன் கூத்தடிக்க கூடியவர். ஒரு முறை ஸ்டார் ஹோட்டலில் தண்ணி அடித்துக் கொண்டு அந்த நடிகையுடன் இருப்பதாக மனைவியின் காதுக்கு எட்டியது.

உடனே கையும் களவுமாக இருவரையும் பிடிக்க வேண்டும் என ஹோட்டலுக்கு ரைடு வந்தவர், கதவை திறந்து பார்த்தால் மாஸ் நடிகரும் படத்தின் தயாரிப்பாளரும் இணைந்து தண்ணி அடித்துக் கொண்டிருந்தனர். உடனே மாஸ் நடிகர், ‘எதற்காக இங்கெல்லாம் வருகிறாய்!’ என்று மனைவியை திட்டி உள்ளார்.

Also Read: குறுக்கு வழியில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து முன்னேறும் நடிகை.. பாதுகாப்பு கவசத்தோடு சுற்றி திரியும் கேவலம்

அதன் பிறகும் அதே நடிகையுடன் மாஸ் ஹீரோ மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடித்தார். அப்போது சிங்கப்பூருக்கு சென்று லூட்டி அடித்துள்ளனர். இந்த விஷயம் மாஸ் ஹீரோவின் குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனே அந்த நடிகையும் இனிமேல் இவருடன் இருந்தால் அடி உதைதான் கிடைக்கும் என்று அக்கட தேசத்து பிரபலத்தை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் மாஸ் ஹீரோ அடங்கிய பாடில்லை. அந்த சமயம் தன்னுடன் நடித்த நடிகைகளை எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தன் வலையில் விழ வைத்து ராஜா போல் வாழ்ந்துள்ளார்.

Trending News