புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினியின் அடுத்த பட போட்டியில் 2 இளம் இயக்குனர்கள்.. அண்ணாத்த ஆட்டம் ஆரம்பம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான இயக்குனர்களை தேர்வு செய்யும் வேலையில் ரஜினி தீவிரமாக உள்ளாராம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தான் அண்ணாத்த. என்னத்த சொல்ல என்ற அளவுக்குத்தான் ஆரம்பத்தில் படப்பிடிப்புகள் இருந்து வந்தன. தற்போது ஒரு வழியாக அண்ணாத்த படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையிலேயே படமாக்க உள்ளதாம் படக்குழு. அதனைத் தொடர்ந்து அண்ணாத்த படம் 2021 தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து விட்டது.

இந்நிலையில் ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக இயக்குனர்களை தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக ரஜினியின் லிஸ்டில் இரண்டு இயக்குனர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் கடந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி. இவருடைய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

அதே சமயம் தனக்கு ஏற்கனவே பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறிய கதையும் ரஜினியை கவர்ந்துள்ளது. இரண்டு இயக்குனர்களையும் மிஸ் செய்துவிடக்கூடாது என்பதற்காக பலே பிளான் ஒன்றை போட்டுள்ளாராம் ரஜினிகாந்த்.

annaatthe-cinemapettai-01
annaatthe-cinemapettai-01

தற்போது கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் சீயான் 60 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகளை கார்த்திக் சுப்புராஜ் முடிப்பதற்குள் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து விடலாம் என யோசித்து உள்ளாராம் ரஜினிகாந்த்.

Trending News