புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அயன் படத்திற்கு பிறகு பல கெட்டப்புகளில் நடிக்கும் சூர்யா.. கிராமத்து படத்துல இப்படியா?

சூர்யா நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் அயன் படத்திற்கு பிறகு பல கெட்டப்புகளில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் இரட்டிப்பாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் சூர்யா 40. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் சூர்யா மற்றும் பாண்டிராஜ் இணையும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளன. மேலும் இந்த படத்தில் கிராமத்தில் நடக்கும் அரசியல் சார்ந்த விஷயங்களை அதிரடியாக கூற உள்ளார்களாம்.

அதுமட்டுமில்லாமல் அயன் படத்திற்கு பிறகு சூர்யா 40 படத்தில் பல கெட்டப்புகளில் நடிக்க உள்ளாராம் சூர்யா. கிட்டத்தட்ட ஐந்து கெட்டப்புகள் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சூர்யா 40 படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களுக்குக்கான ஆட்கள் தேர்வு நடந்து கொண்டிருப்பதாகவும், அது முடிந்தவுடன் சூர்யா 40 படத்தின் அப்டேட் தொடர்ந்து வரும் எனவும் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்களை மிகவும் கவனமுடன் தேர்வு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News