திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கல்கி அவதாரம் எடுத்த பிரபாஸுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்.. பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Prabhas In Kalki 2898 AD: பிரபாஸ் என்கிற நடிகரை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரிய வைத்தது பாகுபலி படத்தின் மூலம்தான். குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டிட்டு வந்த பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அப்போதிலிருந்தே இதே மாதிரி ஒரு படம் வந்தால் தான் அது சம்பவத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

அந்த வகையில் பிரபாஸ் தொடர்ந்து வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் அப்படி நடித்து வந்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்தது. இதனால் எப்படியாவது மறுபடியும் பாகுபலி மாதிரி ஒரு பெயர் வாங்கி விட வேண்டும் என்று போராடி வந்தார். அப்பொழுதுதான் இயக்குனர் நாக் அஸ்வின் கூட்டணியில் இணைந்தார்.

நாளை சம்பவத்துக்கு தயாரான கல்கி

அதனால் கல்கி 2898 AD என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் நாளை ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்திய சினிமாவிலேயே இதுவரை எந்த ஒரு படமும் எடுக்க முடியாத அளவிற்கு முதல் நாள் வசூலை இப்படம் தொட்டுவிடும் என்று கருத்துக்கணிப்பு படி தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது கல்கி படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 600 கோடி செலவு செய்து மிகப்பிரமாண்டமாக ஆச்சரியப்படும் வகையில் கதையை வைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இப்படத்தை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ரிலீஸ் ஆவதற்கு முன்னே பல இடங்களில் பிரீ புக்கிங் போய்க் கொண்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் முதல் நாள் வசூல் இந்திய அளவில் நிச்சயமாக 100 கோடி லாபத்தையும் உலக அளவில் 200 கோடி லாபத்தையும் பார்த்து விடும் என்று கருத்துக் கணிப்பு படி தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிரபாஸுடன், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திசா பதனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் பாகுபலி படத்திற்கு பின் கல்கி படம் பிரபாஸுக்கு ஒரு சிக்சர் அடிப்பது போல் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக ஆந்திரா, மும்பை, தெலுங்கானா போன்ற இடங்களில் கல்கி படத்துக்கு ஃப்ரீ புக்கிங் செய்யப்பட்டு ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது. எது எப்படியோ 44 வயசு வரை கல்யாணம் ஆகாமல் நடித்துக் கொண்டு வரும் பிரபாஸுக்கு அட்லீஸ்ட் படத்தில் வசூல் மூலமாக வெற்றி கிடைத்து ஒரு சந்தோஷத்தை கொடுத்தால் அவருக்கு ஆறுதலாக இருக்கும்.

கல்கி படத்தின் அப்டேட்

Trending News