வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாக்கியாவிற்கு அடுத்து அமிர்தாவை டார்ச்சர் பண்ணும் ஈஸ்வரி.. எழிலைத் தொடர்ந்து கும்பிடு போட்டு கிளம்பிய மருமகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுது என்று சொல்வதற்கு ஏற்ப ஈஸ்வரி கொஞ்சம் கொஞ்சமாக திருந்திய நிலையில் தற்போது மீண்டும் மாமியார் குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டார். ஆனால் தற்போது மாட்டிக்கொண்டது பாக்யா இல்லை, பாக்யாவின் மருமகள் அமிர்தா தான். அதிலும் பேரன் கூட என்று பார்க்காமல் எழில் கஷ்டப்படும் படி பேசி விட்டார்.

அதாவது வீட்டுச் செலவுக்காக செழியன், பாக்கியாவிடம் பணம் கொடுத்தார். அதை முதலில் வாங்க மறுத்த பாக்கியா ஈஸ்வரி, பிள்ளைகள் என்றால் இப்படித்தான் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். அவன் அவனுடைய பொறுப்பை சரிவர செய்யும் விதமாக பணம் கொடுக்கிறான். அதை வாங்கி வைத்துக் கொள் என்று ஈஸ்வரி பாக்கியாவிடம் கூறுகிறார்.

ஓவராக டார்ச்சர் பண்ணும் ஈஸ்வரி

இதை வாசலில் நின்னு எழில் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எழிலால் இந்த பணம் கொடுக்க முடியாமல் தவிக்கிறார். ஏனென்றால் எழில், அவருடைய கனவை நிறைவேற்றும் விதமாக சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். ஆனால் தொடர்ந்து எழிலுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது. இதனால் விரக்தியில் வீட்டுக்கு வரும் எழில், செழியனின் செயலை கண்டு கொஞ்சம் சங்கடமாக பீல் பண்ணுகிறார்.

இதை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக ஈஸ்வரி, இதுதான் பெத்தவங்களுக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள். அதை விட்டுவிட்டு கனவு இலட்சியம் என்று வாழ்க்கை தொலைத்துக் கொண்டு சும்மா சுத்திக்கிட்டு இருந்தா எதுவும் நடக்காது. எது எப்ப செய்யனுமோ, அதை கரெக்டா பண்ணி விட வேண்டும். செழியன் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறான். நீ ஏன் இப்படி ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கிறாய்.

ஒழுங்கா வேலையைத் தேடி குடும்பஸ்தனாக இருக்க பாரு. அதுக்கு அப்புறம் கனவு லட்சியம் என்று முயற்சி பண்ணு என்று ஈஸ்வரி, அனைவரது முன்னாடியும் எழிலை நோகடித்து விட்டார். இதனால் நொந்து போன எழில் மற்றும் அமிர்தா ஒருவரை ஒருவர் அழுது கொண்டு புலம்புகிறார்கள். அப்பொழுது பாக்கியா, எழிலை சமாதானப்படுத்தும் விதமாக பாட்டி சொன்னது நினைச்சு நீ எதையும் கவலைப்படாத.

உன் லட்சியத்தில் நீ ஜெயித்து காட்டுவாய் என நம்புகிறேன். அதனால் அதை மட்டும் நோக்கி பயணம் செய். மற்ற எந்த தடங்கல் வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு உதவியாக அமிர்தா ஹோட்டலில் வேலை பார்க்கிறார். அதற்கு நான் சம்பளம் கொடுத்தால் அதுவே பெரிய தொகையா தான் இருக்கும். அதனால் நீ எதை நினைத்தும் கவலைப்படாமல் உன் லட்சியத்தில் ஜெயிக்க பாரு என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.

அடுத்ததாக ஜெனி, செழியனிடம் இனி நீ மாத மாதம் பணம் கொடுக்கும் பொழுது பாக்யா அத்தையிடம் தனியாக கொடு. இல்லையென்றால் எழிலுக்கு ரொம்பவே கஷ்டமாக தெரியும். கண்டிப்பா எழில் கனவு நிறைவேறும் என்று ஜெனி செழியனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஜெனி மறுபடியும் கர்ப்பமாக இருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள்.

ஆனால் இந்த ஒரு விஷயத்தை வைத்து ஈஸ்வரி, அமிர்தாவுக்கு டார்ச்சர் கொடுக்கும் விதமாக நீயும் ஒரு குழந்தையை பெற்றுக்கோ. அதுதான் நிறைவான வாழ்க்கையாக இருக்கும் என்று அமிர்தா மனசு கஷ்டப்படும் அளவிற்கு கோபத்துடன் பேசுகிறார். இதனை தொடர்ந்து ஏற்கனவே எழில் கேரக்டரில் நடித்த விஷால் வெளியே போனதை தொடர்ந்து தற்போது ஜெனி கேரக்டரில் நடித்து வரும் திவ்ய கணேஷன் உடல்நிலை சரியில்லாததால் இந்த நாடகத்தை விட்டு வெளியேறப் போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News