வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலுக்கு கல்தா கொடுத்துவிட்டு ஜோராக நடக்கும் வேலை..ஆர்யா அதிகமாக எதிர் பார்த்ததால் வந்த வினை

உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது அடுத்தடுத்த வேலைகளில் கமலஹாசன் தீயாய் செயல்பட்டு வருகிறார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் கலந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி படம் தயாரிப்பிலும் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார். முதலாவதாக சிவகார்த்திகேயனின் படம் ஒன்றை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், துல்சர் சல்மான் போன்ற நடிகர்களின் படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

Also Read :300 கோடியை தாண்டி வசூல் செய்த டாப் ஹீரோக்கள்.. அடுத்த வேட்டைக்கு தயாராகும் விஜய், கமல்

இந்நிலையில் கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா உடன் ஒரு ப்ராஜெக்ட் செய்வதாக இருந்தது. கிராமத்து கதைகளை எடுப்பதில் முத்தையா கைதேர்ந்தவர். சமீபத்தில் இவரது இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது முத்தையா ராஜ் கமல் நிறுவனத்திற்கு தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக ஆர்யாவை போடலாம் என கமல் கூறியுள்ளார். அதேபோல் ஆர்யா, முத்தையா படம் உறுதியானது. ஆனால் சில காரணங்களினால் இந்த படம் கைவிடப்பட்டது.

Also Read :4 வெற்றி படங்களையும் கொண்டாடும் கமல்.. மேடையில் சிலாகித்த உலகநாயகன்!

ஆர்யா இந்த படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் கமல் இவ்வளவு சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது என கராராக ஆர்யாவிடம் சொல்லிவிட்டாராம். இதனால் ஆர்யா முத்தையாவை வேறு விதமாக ட்விஸ்ட் செய்துள்ளார்.

அதாவது இந்த படத்தை நாமே பண்ணலாம் ஆனால் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை வைத்த எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அதற்கு இயக்குனர் முத்தையாவும் சரி என்று சொல்லிவிட்டாராம். தற்போது அந்தப் படத்திற்கான வேலை படுஜோராக நடந்து வருகிறதாம்.

Also Read :கெஞ்சி கதறியும் இரக்கம் காட்டாத கமல்.. பெரும் நஷ்டத்தை சந்தித்த விவேக்

Trending News